நடிகை சங்கவியுடன்.... சூப்பர் ஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மீனா! வைரலாகும் வீடியோ..!

Published : Feb 16, 2023, 07:35 PM IST
நடிகை சங்கவியுடன்.... சூப்பர் ஹிட் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மீனா! வைரலாகும் வீடியோ..!

சுருக்கம்

தமிழ் சினிமாவில், முன்னணி நடிகைகளாக இருந்த மீனா மற்றும் சங்கவி இருவரும் சூப்பர் ஹிட் பாடல் ஒன்றிற்கு ஆட்டம் போட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.  

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை மீனா. திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்னர் பல நடிகைகள் திரையுலகை விட்டு விலகி விடும் நிலையில், தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இடைவிடாமல் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த மீனா, தன்னை போலவே தன்னுடைய மகளையும் கோலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார்.

ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனாவின் மகள் நைனிகா... தற்போது படிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அதே போல் திரையுலகில் மிகவும் பரபரப்பாக நடித்து வந்த மீனாவும்,  தன்னுடைய கணவர் வித்யா சாகர் இறப்புக்கு பின்னர், திரைப்படங்களில் நடிக்காமல் உள்ளார். மேலும் கணவரின் இழப்பில் இருந்து இன்னும் முழுமையாக வெளியே வராத மீனாவை அவ்வப்போது அவரது தோழிகள் சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

குட்டிக்கரணம் அடித்தும் ஒன்னும் வேலைக்கு ஆகல.! ஓவர் சீன் போட்ட ஜூலி இப்போ விஜய் டிவி சீரியலில் நடிக்கிறாரா?

இப்படி சந்திக்கும் போதெல்லாம், தோழிகளுடன் சந்தோஷமாக இருக்கும் தருணங்களை மீனா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், மீனாவின் தோழி சங்கவி மீனாவை சந்தித்த போது,  இருவரும் 'மாலை டம் டம்... மஞ்சரை டம் டம்... " பாடலுக்கு கியூட்டாக குத்தாட்டம் போட்டுள்ளார். 

இந்த வீடியோ தற்போது, ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது. சங்கவி - மீனா இருவருமே, தமிழ் சினிமாவில் முன்னணி  ஹீரோயின்களாக இருந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.... மீனா ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்த நிலையில்.... சங்கவி விஜய், அஜித்துக்கு ஜோடியாக ஏகப்பட்ட படங்களில் நடித்தவர். மேலும் இருவரும் சேர்ந்து 'பொற்காலம்' படத்திலும் இணைந்து நடித்துள்ளனர். சங்கவி திருமணத்திற்கு பின்னர், திரையுலகை விட்டு விலகி விட்ட நிலையில், தற்போது மீனாவை சந்தித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்தின் மகளா இது? மளமளவென வளர்ந்து இளம் ஹீரோயின்களை ஓரம் கட்டும் அழகில் ஜொலிக்கும் போட்டோஸ்!


 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!