குழந்தை பெற்றுக்கொள்ள லைசென்ஸ்.... பிரபல நடிகை மோடியிடம் வலியுறுத்தல்....!!!

First Published Dec 30, 2016, 2:24 PM IST
Highlights


' காதல் செய்வீர்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை சஞ்சனா. இவர் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில்  முன்னணி நாயகியாக வளம் வருபவர்.

மேலும் இவர் கோலிவுட்டில் டார்லிங் என்று செல்லமாக அழைக்க படும் நிக்கிகல்  ராணியின் சகோதரியும் ஆவர். இவர் சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அந்த பேட்டியில் , மோட்டார் வாகனங்களை சாலையில் ஓட்டுவதற்கு லைசென்ஸ் வழங்க படுகிறது, பொருட்களை உற்பத்தி செய்து நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கும் லைசென்ஸ் வழங்குகிறார்கள்.

இதுபோல குழந்தை பெற்றுக்கொள்வதற்கும்  லைசென்ஸ் வழங்க வேண்டும் என இவர் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவர் இப்படி கூற காரணம் நிறைய குழந்தைகள் ரோட்டில் பிச்சை எடுக்கும் அவல நிலையை நிறைய இடங்களில்  பார்க்க முடிகிறது என்றும் , இவர்கள் பிச்சை எடுக்க வைப்பதற்காகவே குழந்தைகளை பெற்று கொள்பவர்களாக இருக்கின்றனர் என தெரிவித்தார்.

இதனால் குழந்தை தொழிலாளர்கள் பெருகுகின்றனர்  என்றும், குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பதற்கு லைசென்ஸ் முறையை கொண்டு வருவது அவசியம் என கூறியுள்ளார்.

மேலும் தினமும், ரோட்டோரங்களில் வெயிலில் சுருண்டு விழுந்து கிடைக்கின்றனர் என்றும் அந்த  குழந்தைகளுக்கு நல்ல உணவு, உடை என எதுவும் தர முடியாத சில பெண்கள் குழந்தையை கொண்டு வந்து பிச்சை கேற்கின்றனர் இதை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது.

இது போல குழந்தையை வளர்க்க முடியாதவர்கள் ஏன் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்றும், இதனை கட்டு படுத்த லைசென்ஸ் முறையை கொண்டு வர வேண்டும் என சொல்லுவதாக சஞ்சனா கூறியுள்ளார்.

இதன் மூலம் குழந்தையை வளர்க்க தகுது இருப்பவர்கள் மட்டுமே குழந்தை பெற்று கொள்ள அனுமதிக்க படுவார்கள் என்றும், மீறி தகுதியற்றவர் குழந்தை பெற்றால் அவருக்கு தண்டனை வழங்க படும் என்கிற சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கூறிய சஞ்சனா....

இந்த விஷயம் பற்றி ஒரு முறை தான் டெல்லி சென்றபோது மோடியை சந்தித்து லைசென்ஸ் முறை பற்றி வலியுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.


    

click me!