ரஜினியின் எந்திரனின் மொத்த வசூலை ஏழே நாளில் முறியடித்த - பாகுபலி 2

First Published May 7, 2017, 12:16 PM IST
Highlights
baahubali 2 breaks rajins enthiran Collections in seven days


பாகுபலி 2 இந்திய சினிமாவின் பெருமை என்று தான் சொல்லணும் சினிமாவுக்கு மொழி இல்லை என்பது உண்மை என்று சொல்லும் வார்த்தையின் எடுத்துகாட்டு தான் பாகுபலி 2 படம் என்று சொல்லணும் ஒரு டப்பிங் படம் உலகம் முழுதும் ஒரு மிக பெரிய வெற்றியை கொடுத்த படம் என்றும் சொல்லலாம்.

இந்திய சினிமா உலகில் முதல் படம் 1000 கோடி வசூலை சந்திக்க போகும் படம் இதுவரை 7 நாளில் 860 கோடி வசூல் செய்துள்ளது இன்னும் ஓர் இரு நாளில் 1000 கோடி வசூலை சந்திக்கும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை என்றும் சொல்லலாம்.

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் வெளியான ''எந்திரன்'' தான் தமிழகத்தில் 75 கோடி வருவாய் ஈட்டிய முதல் படம். இந்த சாதனையை அடுத்து வந்த தமிழ் படங்கள் எதுவும் இந்த வசூலை முறியடிக்க வில்லை. இந்த சாதனையை இன்னும் சில தினங்களில் மிஞ்சப்போகிறது பாகுபலி 2. 

இந்தியாவின் அனைத்து மொழிப படங்களின் வசூல் சாதனையையும் ஒட்டு மொத்தமாக அடித்து நொறுக்கியுள்ளது பாகுபலி 2. நாளுக்கு நாள் அந்தந்த பகுதி மற்றும் மொழி விநியோகஸ்தர்களும் பெருமையோடு பொது வெளியில் அறிவித்து வருகிறார்கள்.

தமிழக திரைப்பட விநியோகஸ்தர்கள் - தியேட்டர் உரிமையாளர்கள் இந்த விஷயத்தில் எப்போதும் வெளிப்படை தன்மை இன்றி மெளனம் காப்பது தொடர்கிறது. தனி நபர் விஷயங்களை கூட பொது வெளியில் பகிரக் கூடிய திரையுலகம் வசூல் தகவல்களை மட்டும் கவனமாக தவிர்க்க காரணம் இங்கு வசூல் கணக்குகளில் நேர்மை இல்லை என்பது தான் என்கிறார் திரைப் பட விமர்சகர் இராமானுஜம். 

தமிழ்நாட்டில் பாகுபலி 2 திரையிட்ட நகர்புற மற்றும் மல்டி பிளக்ஸ், மால் தியேட்டர்கள் அனைத்திலும் இரண்டு வாரங்களுக்கு டிக்கட் விற்பனை ஆகி விட்டது. புறநகர் பகுதி தியேட்டர்களில் ஒவ்வொரு காட்சியும் சராசரி 400முதல் 700 பேர் படம் பார்க்கின்றனர்.

பாகுபலி2 படம் வாங்கியுள்ள விநியோகஸ்தர்கள் வாய் திறக்க மறுக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள மல்டி பிளக்ஸ், மால் தியேட்டர்களில் நேர்மையான கணக்குகள் கடைப்பிடிக்கபடுகின்றன பிற தியேட்டர்களில் எங்கும் நேர்மையான கணக்குகள் கடைப்பிடிக்கபடவில்லை.

தியேட்டர் மேனேஜர், படப் பிரதிநிதி, குத்தகைதாரர், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று அவரவர் தகுதிக்கு ஏற்ப தவறுகள் செய்கின்றனர். என்கிறார் தயாரிப்பாளர் ஒருவர். முதல் வாரம் தமிழ்நாடு மொத்த வசூல் 72 கோடி என்பதே ஒரிஜினல் வசூல்.

ஆனால் இது திட்டமிட்டு குறைவாக கூறப்பட்டு வருகிறது. வசூல் மழையில் முதல் மூன்று இடங்களில் செங்கல்பட்டு, மதுரை, சென்னை நகர விநியோகப் பகுதிகள் இடம் பிடித்துள்ளது. 62 தியேட்டர்களில் மட்டுமே கோவை பகுதியில் ரீலீஸ் செய்யப்பட்டதாலும், டிக்கட் கட்டணம் குறைவு என்பதால் வசூல் குறைவானதால் முதல் மூன்று இடங்களில் வர வேண்டிய கோவை ஏரியா இடம் பெறவில்லை. 

எந்திரன் படத்திற்கு முதலில் 50 கோடி என வருவாய் காட்டப்பட்டது, சில அதிரடி நடவடிக்கைக்கு பின் உண்மையான வருமானம் 75 கோடி என உறுதியானது. 

தமிழகத்தில் எந்திரன் ஓடி முடியும் வரை கிடைத்த வருவாய் 75 கோடி. அதே போல இந்தியாவில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் அவர் படங்களுக்கு முதல் மூன்று நாட்களுக்கு மினிமம் 300, 500 டிக்கட் விற்கப்பட்டது ஆனால் பாகுபலி அப்படியல்ல. பாகுபலி முதல் வாரத்தின் முடிவில் 72 கோடி வசூலித்துள்ளது. இந்த வசூல் கணக்கின் போக்கில் பாகுபலி 2 மே இறுதி வரை தமிழ்நாடு தியேட்டர்களில் ஓடும் அதன்மூலம் 150 கோடிக்கு மேல் வசூலை அள்ளும் என்கிறார்.

click me!