ரிச் வரவேற்பில் ரிச்சி! - நிவின் பாலி செம ஜாலி

Asianet News Tamil  
Published : May 07, 2017, 09:49 AM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
ரிச் வரவேற்பில் ரிச்சி! - நிவின் பாலி செம ஜாலி

சுருக்கம்

nivin pauly richi has huge response

நேரம்’ படம் ஹிட் அடித்து நெடுநாட்கள் ஆன பிறகும் நிவின்பாலிக்கு தமிழில் நேரம் நன்றாகத்தான் இருக்கிறது. அவரது அப்கம்மிங் தமிழ் ஃபிலிக்கான ரிச்சிக்கு தமிழ் ரசிகர்களிடம் ஏக வரவேற்பு உருவாகியிருப்பதாக அந்த படத்தின் க்ரூ குதூகலிக்கிறது. 

ரிச்சி  படத்தின் இயக்குநர் கெள்தம் ராமச்சந்திரன் ஐந்து வருடங்களுக்கு முன்பே நிவின் பாலியை சந்தித்து ஒரு ப்ராஜெக்டுக்கு தயார் செய்திருக்கிறார். ’நல்ல கதையை பிடிங்க ப்ரோ’ என்று நிவின் சொல்ல, ஒரு கன்னட படத்தை பார்த்து இம்ப்ரஸான கெளதம் அதை நிவியிடம் கூற அவரும் அதை பார்த்துவிட்டு டபுள் ஓ.கே. சொல்லிவிட்டார்.

தமிழுக்கு ஏற்ற மாதிரி இந்த கன்னடபடத்தை ஏக மெனெக்கடலுடன் தமிழுக்கு ஏற்ற மாதிரி மாற்றியிருக்கிறார் இயக்குநர். திரைக்கதை உருவாக்கலில் நிவியின் ஈடுபாடு வேறு அதிகமாம். 

நிவினுடன், பாலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் தமிழ் கேமெராமேன் நட்டியும் இதில் இணைகிறார். முதலில் இந்த கேரக்டருக்கு சசிக்குமாரை பரிசீலித்திருக்கிறார்கள். ஆனால் ‘எந்த குறிப்பிட்ட இமேஜும் இல்லாத ஒரு நடிகர்தான் இதுக்கு செட் ஆவார்.” என்று சொல்ல நட்டிக்கு போயிருக்கிறது வாய்ப்பு. பிரகாஷ் ராஜ், கன்னட நடிகை ஸ்ரதா ஸ்ரீநாத் என்று டீம் செட் ஆக தூத்துக்குடி மற்றும் மணப்பாடு என்று கடற்புரங்களில் வளர்ந்திருக்கிறது ரிச்சி. 

டீசர் சொல்வதை பார்த்தால் ரிச்சி எனும் ரெளடி கேரக்டரில் நிவின் வருகிறார். ‘இந்த உலகத்துல டாக்டர், இஞ்சினியர் இருக்கிறாங்க. அதே மாதிரி நானொரு ரெளடியர்” என்று நிவின் தன் கேரக்டருக்கு நியாயம் பேசுவது போல் காட்சிகள் நகர்கின்றன. ‘ஏலே, பேப்பயலே’ என்று தூத்துக்குடி மண்ணின் பாஷைகள் புகுந்து விளையாடுகின்றன.

தூத்துக்குடி மண்ணில் எடுக்கப்படும் ஆக்‌ஷன் படங்கள் சோடை போவதில்லை என்று ஏற்கனவே இயக்குநர் ஹரி போட்டு கொடுத்திருக்கும் சென்டிமென்ட் லைன் ரிச்சிக்கும் செட் ஆகுமென்பதே அந்த டீமின் எதிர்பார்ப்பு. 
இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தினுள் 4.6 மில்லியன்பேரால் பார்க்கப்பட்டுள்ளது, இது கோலிவுட்டில் செம ரெக்கார்டு என்கிறது கூகுள்.

நேரம் படத்தில் நடித்தபோது நிவின் பாலிக்கு மலையாளத்திலேயே பெரிய மார்க்கெட் இல்லை. ஆனால் இப்போது அங்கே இவர் தவிர்க்க முடியாத திரை ஆளுமையாகி நிற்கிறார். பிரேமம் என்று காதலில் லயிப்பதாக இருக்கட்டும், சகாவு என்று கொள்கை மொழி திரைப்படமாக இருக்கட்டும் நிவியின் ஹிட் கிராஃப் ஏறிக் கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் கோலிவுட்டையும் ரிச்சி மூலம் நேரடியாக தாக்க வருகிறார் நிவின். 
இந்த படத்தில் இன்னொரு ஆச்சரியம் நடிகர் விஷாலின் அப்பா ஜி.கே.ரெட்டியும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். 

அதனால் கண்டிப்பாக திருட்டு விசிடி வெளி வராமல் விஷால் ஓடியாடி உழைப்பார், நமக்கு லக்கு தாண்டா என்று கெத்து காட்டுகிறது ரிச்சி க்ரூ.

வாடா மச்சான்!
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Kavya Maran Wedding: காவ்யா மாறன் கல்யாணம்! ரகசியம் உடைத்த நடிகர்! அப்ப மாப்பிள்ளை அவர் தானா?
Baahubali Facts: முதல் நாளே ரூ.70 கோடி நஷ்டம்.. ராஜமௌலி கதறி அழுத நாள்! பாகுபலி சந்தித்த பெரிய நெருக்கடி