
மார்வெல் சூப்பர் ஹீரோ படமான அவெஞ்சர்ஸ் படத்தில் பிளாக் விடோ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானவர் ஸ்கார்லெட் ஜொஹான்ஸன். 'தி ப்ரெஸ்டீஜ்', 'லூசி', 'ஜோஜோ ரேபிட்' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் பின்னிபெடலெடுக்கும் ஹாலிவுட் நாயகிகளில் ஸ்கார்லெட் மிக முக்கியவமானவர்.
நடிகர் ரயன் ரேனால்ட்ஸை 2008ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்கார்லெட் 2011ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன் பின்னர் ரொமைன் டௌரியாக் என்கிற பிரெஞ்ச் விளம்பர நிறுவனத்தின் உரிமையாளரை 2014ம் ஆண்டு திருமணம் மணந்தார், ஆனால் அந்த திருமண வாழ்க்கையும் நீடிக்காமல் 2017ம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.
இந்நிலையில் காமெடி நடிகரான காலின் ஜோஸ்டைக் என்பவரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்த ஸ்கார்ட்லெட் ஜொஹான்ஸன், கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் எளிமையான முறையில் 3வது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள காலின், தனது மகனுக்கு காஸ்மோ என்று பெயரிட்டுள்ளதாவும் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை கேள்விப்பட்ட உலகம் முழுவதும் உள்ள பிளாக் விடோ ரசிகர்கள் ஸ்கார்லெட்டுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.