குழப்பத்தில் திணறடிக்கும் மெர்சல் - ஒரு வழி பண்ணாம விடாது போல..!

 
Published : Oct 13, 2017, 10:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
குழப்பத்தில் திணறடிக்கும் மெர்சல் - ஒரு வழி பண்ணாம விடாது போல..!

சுருக்கம்

Audit Committee reports that censorship certificate has not been issued as all works for Merseyside have been completed

மெர்சல் படத்திற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என தணிக்கை குழு தெரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகைகள் சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் மெர்சல் திரைப்படம் தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் சுமார் 130 பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் குறித்து பல்வேறு முரண்பட்ட கருத்துகள் வலைதளங்களில் பரவி ரசிகர்கள் மத்தியில் பீதியை கிளப்பி வருகிறது. 

மெர்சல் படத்தில் புறா வரும் காட்சிகள் மற்றும் பாம்பு பெயர் உள்ளிட்ட பிரச்சனைகளில் விலங்கு நல வாரியம் அனுமதி தரவில்லை.  இதனால் திட்டமிட்டபடி தீபாவளியன்று மெர்சல் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே மெர்சல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக இயக்குனர் அட்லீ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என தணிக்கை குழு விளக்கம் அளித்துள்ளது.

காரணம் படத்திற்கு விலங்கு நல வாரியத்திடம் அனுமதி பெறாததால் தணிக்கை சான்று வழங்கவில்லை என தணிக்கை குழு விளக்கம் அளித்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!