“ Dhanush hindi movie “| நேரடியாக ஓடிடியில் வெளியாகும் தனுஷ் நடித்த ஹிந்தி படம் ; நாளை டிரைலர் ரிலீஸ் !!

Kanmani P   | Asianet News
Published : Nov 23, 2021, 02:06 PM ISTUpdated : Nov 23, 2021, 02:11 PM IST
“ Dhanush hindi movie “| நேரடியாக ஓடிடியில் வெளியாகும் தனுஷ் நடித்த ஹிந்தி படம் ; நாளை டிரைலர் ரிலீஸ் !!

சுருக்கம்

“ Dhanush hindi movie" | disney+ hotstar  ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 24-ம் தேதி "Atrangi Re" நேரடியாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து விட்டவர் நடிகர் தனுஷ். குட்டி, படிக்காதவன் என காதல் நாயகனாக வந்தவர் மாரி, அசுரன், கர்ணன் என மாஸ் நாயகனாக தமிழ் திரை உலகை கலக்கி வருகிறார். பல விருதுகளுக்கு சொந்தக்காரரான தனுஷ்  தமிழை தொடர்ந்து பாலிவுட்டிலும் கால் பதித்தார். 2013- ல் வெளியான Raanjhanaa வை தொடர்ந்து தற்போது "Atrangi Re" படத்தில் தனுஷ் நடித்துள்ளார். 

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் நடிப்பில் உருவாகியுள்ள  படம் 'அத்ரங்கி ரே'. கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, டெல்லி, ஆக்ரா பகுதிகளில் நடைபெற்றது. கொரோனா பரவலால் கடந்த ஆண்டு தடைபட்ட இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நடந்து முடிந்துள்ளது. மேலும், படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கும் தயாராகவுள்ளது. ஆனால், மீண்டும் அதிகமான கொரோனா அச்சுறுத்தலால் திட்டமிட்டபடி இந்த படம் வெளியாகாவில்லை. 

தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுவிட்டாலும் பல்வேறு பெரிய படங்கள் தொடர்ச்சியாக வெளியாகவுள்ளன. இதனை முன்னிட்டு 'அத்ரங்கி ரே' திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தயரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. disney+ hotstar ஓடிடி தளம் இதன் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. நேரடியாக இந்த ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 24-ம் தேதி  "Atrangi Re" வெளியாகும் என பாடக்குழு அறிவித்துள்ளது. அதோடு நாளை இந்த படத்திலிருந்து டிரைலர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து ஏ.ஆர் ரகுமானின் போஸ்ட் இதோ... 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?