
அட்லீ- விஜய் கூட்டணியில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த 'பிகில்' திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்தில் ஏராளமான காட்சிகள் காப்பி பெஸ்ட் வகையாற என நெட்டிசன்கள் இயக்குநர் அட்லீயை வறுத்தெடுத்தனர். இதனால் 'பிகில்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிய 'பிகில்', திரைப்படம் இந்த வருடம் வெளியான படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. ஆனால் பிகில் திரைப்படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை, வசூலும் மிகவும் சுமார் தான் என தியேட்டர் உரிமையாளர்கள் சிலர் அதிரடி கிளப்பினர். இதனை முற்றிலும் மறுத்துள்ள தயாரிப்பாளர் தரப்பு 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: காதல் நகரத்தில் பிரபல நடிகையுடன் சுற்றித்திரியும் அல்லு அர்ஜுன்... சோசியல் மீடியாவில் வைராலகும் புகைப்படங்கள்...!
'பிகில்' திரைப்படம் வெளியானதில் இருந்தே கதை திருட்டு, காப்பி பெஸ்ட் காட்சிகள் என இணையதளம் முழுவதும் அட்லீயை ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். அந்த பிரச்னை கொஞ்சம் அடங்குவதற்குள் பட வசூல் தொடர்பான சர்ச்சைகள் எழுந்தது. ஏற்கனவே பிகில் திரைப்படத்திற்காக 18 மணி நேரத்திற்கும் மேலாக வேலை பார்த்திருந்த அட்லீ, இதனால் கூடுதலாக டையார்டு ஆனார். தற்போது அனைத்து பிரச்னைகளும் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பிகில் திரைப்படமும் அமோக வெற்றி பெற்றுள்ளது. 'பிகில்' படத்திற்காக உழைத்ததால் மனைவியுடன் நேரத்தை செலவிட முடியாமல் தவித்த அட்லீ, தனது 5ம் ஆண்டு திருமண நாளை கொண்டாட மனைவி ப்ரியாவுடன் இத்தாலி பறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஏன் இந்த ஓவர் உரசல்... வைரலாகும் விஜய் சேதுபதி- ஐஸ்வர்யா ராஜேஷ் செல்ஃபி... கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்...!...
அட்லீ அடுத்து ஷாரூக்கான் படத்தை இயக்க உள்ளாரா, இல்லை தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளாரா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ள நிலையில், மனைவியுடன் ஜாலியாக டூர் கிளம்பியுள்ளார் அட்லீ. தற்போது இத்தாலி நகரில் முகாமிட்டுள்ள காதல் தம்பதி, அங்கு சில மாதங்கள் தங்கியிருந்த பின்னரே சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே கணவன், மனைவி இருவரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள டூர் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் காதல் தம்பதி அட்லீ, ப்ரியாவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.