மாடல் அழகியையும் அவரது தாயாரையும் ஒரே நேரத்தில் படுக்கைக்கு அழைத்த வில்லன் நடிகர்..!! நடந்த உண்மைகளை கூறி பகீர் கிளப்பிய சம்பவம்..!!

Published : Nov 10, 2019, 11:37 AM ISTUpdated : Nov 11, 2019, 12:58 PM IST
மாடல் அழகியையும் அவரது தாயாரையும் ஒரே நேரத்தில் படுக்கைக்கு அழைத்த  வில்லன் நடிகர்..!! நடந்த உண்மைகளை கூறி பகீர் கிளப்பிய சம்பவம்..!!

சுருக்கம்

விநாயக் தன்னிடம் ஆபாசமாக பேசியதுடன் தம் தாயாரையும் ஆபாசமாக பேசி இருவரையும் படுக்கைக்கு அழைத்தார். என அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி இருந்தார்.  இதுதொடர்பாக அவர் கல்பட்டா காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்த நிலையில்,  சமீபத்தில் அந்த வழக்கில் விநாயக் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். 

மாடல் அழகியையும்,  அவரது அம்மாவையும் ஆபாசமாக பேசி ,  ஒரே நேரத்தில் அவர்களை படுக்கைக்கு அழைத்தார் என்ற தனி மீதான குற்றச்சாட்டை வில்லன் நடிகர் விநாயக் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  மலையாள  திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார் விநாயகன்.  இவர் விஷால் நடித்த திமிரு,  தனுஷ் நடித்த மரியான்,  சிம்புவுடன் சேர்ந்து சிலம்பாட்டம்,  உள்ளிட்ட படங்களில் நடித்து பெயர் பெற்றவராவார். 

இவர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.  இந்நிலையில் இவர் மீது சமூக ஆர்வலரும் மாடலுமான மிருதுளா தேவி # Metoo புகார் கூறியிருந்தார். அதாவது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மிருதுளா தேவி விநாயக்கை அழைத்தபோது,  விநாயக் தன்னிடம் ஆபாசமாக பேசியதுடன் தம் தாயாரையும் ஆபாசமாக பேசி இருவரையும் படுக்கைக்கு அழைத்தார். என அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி இருந்தார்.  இதுதொடர்பாக அவர் கல்பட்டா காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்த நிலையில்,  சமீபத்தில் அந்த வழக்கில் விநாயக் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி,  விநாயக்  மீது கல்பட்டா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  அதில் மிருதுளா தேவி தன் மீது வைத்த குற்றச்சாட்டு உண்மைதான் என விநாயக ஒப்புக்கொண்டதாக தெரிகிறது . 

இதனால் இந்த வழக்கின் விசாரணை கல்பட்டா நீதிமன்றத்தில் அடுத்த மாதம் முதல் நடக்க உள்ளது.  மேலும் விநாயக் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனையும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?