விக்னராஜன் இயக்கியுள்ள இந்த படத்தின் டிரெய்லரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சொன்ன நேரத்திற்கு டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் என முதல் படத்திலேயே மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து ராஜா, ராணி என்ற படத்தை இயக்கினார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட், கோலிவுட்டின் செல்லப்பிள்ளையாக வலம் வர ஆரம்பித்தார். அதன் பின்னர் அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என தளபதி விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்து முன்னணி இயக்குநராக உயர்ந்தார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து இந்தியில் படம் இயக்க போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென பட தயாரிப்பில் இறங்கிவிட்டார்.இதற்கு முன்பே இயக்குநராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்த அட்லீ, 2017ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான “சங்கிலி புங்கிலி கதவ தொற” என்ற படத்தை தயாரித்திருந்தார்.
மீண்டும் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள அட்லீ, தனது ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ள புதிய படத்திற்கான டைட்டிலை நேற்று ரிலீஸ் செய்தார். “அந்தகாரம்” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் டைட்டில் போஸ்டரை அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கைதி, மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன், மீஷா கோஷல் ஆகியோர் நடித்துள்ளனர்.
விக்னராஜன் இயக்கியுள்ள இந்த படத்தின் டிரெய்லரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சொன்ன நேரத்திற்கு டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை அந்தகாரம் படத்தின் டிரெய்லரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் யூ-டியூப் ட்ரெண்டிங்கிலும் “அந்தகாரம்” டிரெய்லர் முதலிடம் பிடித்துள்ளது. பார்க்கும் போதே க்ரைம் திரில்லர் என்பதை உணர முடிகிறது. டிரெய்லர் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.