ஒவ்வொரு தூய்மை பணியாளர்களுக்கும் உதவி..! மிரட்டலாக செயலில் இறங்கிய ராகவா லாரன்ஸ்!

Published : Apr 14, 2020, 07:16 PM IST
ஒவ்வொரு தூய்மை பணியாளர்களுக்கும் உதவி..! மிரட்டலாக செயலில் இறங்கிய ராகவா லாரன்ஸ்!

சுருக்கம்

பிரபல நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ், யாருமே இதுவரை எதிர்பாராத, மிகப்பெரிய நிதி உதவி தொகையை அறிவித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

பிரபல நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ், யாருமே இதுவரை எதிர்பாராத, மிகப்பெரிய நிதி உதவி தொகையை அறிவித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இதை தொடர்ந்து தமிழகத்தில் கூலி வேலை செய்து வரும் பணம் வேலை இல்லாமல், சாப்பிட்டிற்கு கூட கஷ்டப்படுவதை அறிந்து, மிகவும் மன வேதனை அடைந்ததாகவும், அதனால் தன்னுடைய நண்பர்கள் மற்றும் ஆடிட்டருடன் எப்படி பட்ட உதவிகளை மக்களுக்கு செய்ய வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அறிவித்த ராகவா லாரன்ஸ், இன்று காலை, முதல் வேலையாக ஏழை மக்களுக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் உணவு வழங்கப்படும் என்பதை தெரிவித்தார்.

மேலும் தன்னார்வலர்கள் உணவு போட்டுங்கள் கொடுத்து உதவக்கூடாது என்று போட்ட தடையை தளர்த்தியதற்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்திருந்தார் ராகவா லாரன்ஸ்.



இதை தொடர்ந்து தற்போது, தங்களுடைய உயிரை பணயம் வைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு ரூபாய் 25 லட்சம் நிதி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பத்திரிக்கை மற்றும் ‌ஊடகத்துறை நண்பர்கள் ‌அனைவருக்கும்‌ என்‌ இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்‌. இன்று தமிழ்புத்தாண்டு, நாம்‌ அனைவரும் வீட்டில்‌ இருக்கிறோம்‌. இந்த தருணத்தில் மருத்துவர்களாக, செவிலியர்களாக, காவலர்களாக, தூய்மை பணியாளர்களாக, நமக்காக பணிபுரிந்து கொண்டிருக்கும் மனித உருவில்‌ வாழும் கடவுள்களுக்கு வாழ்த்துக்களையும்‌, நன்றியையும் தெரிவித்துக்‌ கொள்றேன்‌.

இன்று காலை ராகவாலாரன்ஸ்‌ அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூற தொலைபேசியில்‌ அழைத்து இருந்தேன்‌. அப்போது அவர் பேசும்போது, “அண்ணா, நாம் வீட்டிற்கு வாங்கி வரும் ‌அத்தியாவசிய பொருட்களையே 12 மணிநேரம் வெளியில் வைக்கும் ‌இச்சமயத்தில்‌, நம் வீட்டு குப்பைகளை முகம் சுளிக்காமல் தினமும்‌ எடுத்து செல்லும் தூாய்மை பணியாளர்களுக்கு ௨தவி செய்ய விரும்புவதாகவும்‌, தாங்கள்‌ எனக்கு கொடுக்கவிருக்கும்‌ சம்பளத்தொகையில் ‌25 லட்சம் ரூபாயை தூய்மைபணியாளர்களுக்கு, அவர்களின் வங்‌கிகணக்கில் நேரிடையாக சென்றடைய வழிசெய்யுமாறும்‌ கூறினார்‌”. இத்தகைய நல்லுள்ளம் கொண்ட ராகவாலாரன்ஸ்‌ அவர்களுடன்‌ இணைந்து பணிபுரிவதில் பெருமை கொள்கிறேன்‌. என தயாரிப்பாளர் கதிரேசன் கூறியுள்ளார். 



ஆகவே ராகவாலாரன்ஸ் ‌அவர்களின் விருப்பபடி 25லட்சம் ரூபாயை தூய்மைபணியாளர்களின் வங்கிகணக்கில் செலுத்தவுள்ளோம்‌. எனவே தூய்மை பணியாளர்கள் தங்களின்‌ அடையாள அட்டை மற்றும்‌ அடையாள
அட்டையில்‌ உள்ள நபரின் வங்கிகணக்கு எண் விவரங்களை கீழ்க்கண்ட எண்ணிற்கு வாட்ஸ்‌அப் மூலம்‌ அனுப்புமாறும்‌, இதற்கு ஊடக மற்றும்‌ பத்திரிக்கைதுறை நண்‌பர்கள்‌ உதவுமாறும் கேட்டுக்கொள்கிறோம்‌.

வாட்ஸ்‌அப்‌ எண்‌: 6382481658

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?