கங்குவா ரேஞ்சுக்கு பில்டப் உடன் வெளிவந்த அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தின் அறிவிப்பு

புஷ்பா 2 படத்தின் அதிரிபுதிரியான வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் படத்தை அட்லீ இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Atlee and Allu Arjun Team up For Magnum Opus Movie With Sun Pictures gan

Atlee - Allu Arjun Movie Announcement : நடிகர் அல்லு அர்ஜுன் இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவர் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அல்லு அர்ஜுனின் 22-வது படத்தை அட்லீ இயக்க உள்ளார். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹாலிவுட் தரத்தில் உருவாகும் அட்லீ படம்

Latest Videos

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தின் அறிவிப்பு வீடியோவில் சன் டிவி அலுவலகத்தில் மாஸ் எண்ட்ரி கொடுக்கும் அட்லீயையும், அல்லு அர்ஜுனையும் வரவேற்று அவர்களுடன் உரையாடும் கலாநிதி மாறன், அவர்கள் இருவரையும் வாழ்த்தி அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கிறார். அமெரிக்காவிற்கு சென்றதும், அங்கு டெர்மினேட்டர், அவெஞ்சர்ஸ், அவதார் போன்ற படங்களுக்கு வி.எஃப்.எக்ஸ் பணிகளை மேற்கொண்ட லோலா நிறுவனத்திற்குள் அட்லீயும், அல்லு அர்ஜுனும் எண்ட்ரி கொடுக்கின்றனர்.

பின்னர் அங்கு பணியாற்றும் வி.எஃப்.எக்ஸ் இயக்குனர் ஒருவர் பேசுகையில், தற்போது தான் அட்லீ படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன். அது என் தலைக்குள் இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறது என வியப்புடன் கூறுகிறார். இதையடுத்து அவெஞ்சர்ஸ், பசிபிக் ரிம் போன்ற படங்களில் பணியாற்றிய மைக் எலிசால்டே கூறுகையில், இந்த படத்தின் ஸ்கிரிப்ட் இதுவரை நான் பார்க்காத ஒன்றாக இருந்தது. இது சிறந்ததிலும் மிகச் சிறந்து என சிலாகித்துக் கூறுகிறார்.

இதையும் படியுங்கள்... அட்லீ - அல்லு அர்ஜுன் இணையும் படத்தின் ஹீரோயின் இவரா?

600 கோடி பட்ஜெட்

இந்த அறிமுக வீடியோவை பார்க்கும் போது இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக உள்ளது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. மேலும் இப்படத்திற்காக பல்வேறு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்த உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை சுமார் 600 கோடி பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம். இப்படத்தின் அறிவிப்பு வீடியோவை பார்த்த ரசிகர்கள் அட்லீயா இப்படி ஒரு படத்தை எடுக்கிறார் என ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்கின்றனர். ஒரு சிலரோ கங்குவா படத்திற்கும் இப்படி தான் பில்டப் கொடுத்தார்கள் என கலாய்த்து வருகின்றனர்.

Magic with mass & a world beyond imagination!

Teaming up with garu for something truly spectacular with the unparalleled support of pic.twitter.com/mTK01BVpfE

— Allu Arjun (@alluarjun)

பான் வேர்ல்டு படம்

அட்லீ - அல்லு அர்ஜுன் இருவரின் கடைசி படங்களும் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளியது. அட்லீ இயக்கிய ஜவான் 1000 கோடியும், அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 1800 கோடியும் வசூலித்திருந்தது. அவர்கள் இருவரும் தற்போது இணைந்துள்ளதால் அப்படம் 2000 கோடி வசூலித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மேலும் இது பான் வேர்ல்டு படமாக உருவாகவும் வாய்ப்புள்ளது. இப்படத்தில் யார்... யாரெல்லாம் பணியாற்ற உள்ளார்கள் என்கிற தகவலை படக்குழு சீக்ரெட் ஆக வைத்துள்ளது. நமக்கு கிடைத்த தகவல்படி படத்தில் நாயகியாக சமந்தா நடிக்க இருப்பதாகவும், சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... அட்லீ படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் - எவ்வளவு தெரியுமா?

vuukle one pixel image
click me!