
Ajithkumar Cut Out Collapsed : நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி (Good Bad Ugly) திரைப்படம் ஏப்ரல் 10ந் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், திரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ள இப்படம் அஜித்தின் 63வது படமாகும். இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அஜித் ரசிகர்கள் அலப்பறை கிளப்பி வருகின்றனர். அந்த வகையில் நெல்லையில் உள்ள PSS மல்டிபிளக்ஸ் திரையரங்கில் நடந்த ஒரு சாதனை முயற்சி வேதனையில் முடிந்துள்ளது.
285 அடி உயர கட்-அவுட் சரிந்து விபத்து
குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸை கொண்டாடும் விதமாக, அஜித் ரசிகர்கள் 285 அடி உயரமுள்ள ஒரு மிகப்பெரிய கட்-அவுட் அமைத்தனர். இந்த பணிகள் பெரும் உற்சாகத்துடன் நடைபெற்று வந்த நிலையில், ஏப்ரல் 6ந் தேதி மாலை 6 மணிக்கு, அந்த கட்-அவுட் பாரம் தாங்காமல் திடீரென சரிந்தது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில், யாருக்கும் காயமில்லை. இந்த கட் அவுட் சரிந்து விழும் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி, அஜித் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்... குட் பேட் அக்லி விண்டேஜ் சாங்ஸ் சீக்ரெட் : ஒன்னு ராஜா பாட்டு; இன்னொன்னு சினிமா பாட்டே இல்லையா?
கட்-அவுட் சரிந்தது எப்படி?
கட்-அவுட் அமைப்பதில் செய்த அலட்சியமே இந்த விபத்துக்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பொதுவாக, பெரிய அளவிலான கட்-அவுட்களை அமைப்பதற்கு ஒரு சரியான திட்டம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை. ஆனால், இந்த கட்-அவுட் அமைப்பதற்கு முன், மேல் பகுதிக்கான பணிகள் தொடங்கியதால், அடிப்பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, கட்-அவுட் நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டது. மேலும், வீசும் காற்றின் அழுத்தத்தை சமாளிக்க பேனர்களில் ஓட்டைகள் இல்லாததால், காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் கட்-அவுட் சரிந்து விழுந்துள்ளது.
நெட்டிசன்கள் கருத்து
அஜித் ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி, கட்-அவுட்கள் அமைப்பது வழக்கமாக இருந்தாலும், அவை பாதுகாப்புடன் செய்யப்பட வேண்டும் என்பதே நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது. சிறிய அலட்சியமும் பெரிய விபத்துக்களை உண்டாக்கிவிடும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. இதற்கு முன்னர் நடிகர் சூர்யாவுக்கு 275 அடி உயரத்தில் கட் அவுட் வைக்கப்பட்டதே சாதனையாக இருந்த நிலையில், அதை முறியடிக்க அஜித் ரசிகர்கள் 285 அடியில் வைக்க முயன்ற இந்த கட் அவுட் சரிந்து விழுந்ததால், அவர்களின் சாதனை முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதையும் படியுங்கள்... விஜய் பட சாதனையை அடிச்சு தூக்கிய அஜித்; புது வரலாறு படைத்த குட் பேட் அக்லி!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.