Test Twitter Review: ஓடிடியில் நேரடியாக வெளியான 'டெஸ்ட்' பாஸா? பெயிலா?

Published : Apr 04, 2025, 05:25 PM ISTUpdated : Apr 04, 2025, 08:53 PM IST
Test Twitter Review: ஓடிடியில் நேரடியாக வெளியான 'டெஸ்ட்' பாஸா? பெயிலா?

சுருக்கம்

நயன்தாரா நடிப்பில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ள, 'டெஸ்ட்' திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனம் பற்றி பார்க்கலாம்.  

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி படத்தின் ரிலீசுக்கு பின்னர், நீண்ட நாட்களாக எந்த படமும் ரிலீஸ் ஆகாமல் இருக்கும் நிலையில், இவர் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ள டெஸ்ட் திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.

சசிகாந்த் இயக்கத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. சசிகாந்த் இதற்க்கு முன், தனுஷின் ஜகமே தந்திரம் உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ள நிலையில், இப்படத்தின் மூலம் ஒரு இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். 

ஒரு ஸ்போட்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள இந்த படத்தில்,  நயன்தாரா, குமுதா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இசைமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார். இன்று ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுள்ள இந்த படத்தின் ட்விட்டர் விமர்சனம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

ரசிகர் ஒருவர் இப்படம் குறித்து தன்னுடைய விமர்சனத்தை தெரிவிக்கும் போது, "இது ஒரு பேமிலி செண்டிமெண்ட் கலந்த ஸ்போட்ஸ் டிராமா. முதல் பாதி மிகவும் பொறுமையாக நகர்கிறது. BGM மற்றும் ஸ்கிரீன் பிளே நன்றாக இல்லை. ஆனால் நயன்தாரா மற்றும் மாதவனுக்காக இப்படத்தை பார்க்கலாம் என கூறி, 5க்கு 2.5 மதிப்பீடு கொடுத்துள்ளார்.
 

மற்றொரு விமர்சனத்தில், "நயன்தாராவுக்கும் ஆர். மாதவனுக்கும் இடையிலான சிறந்த கெமிஸ்ட்ரி, இருவரும் அவர்கள் தங்கள் சொந்த சவால்களை எதிர்கொள்ளும்போது நயன்தாராவுக்கு சாதகமாக மாறுகிறது. சசிகாந்த்தின் இந்த திரைப்படம் தற்போது நெட்பிளிக்சில் வெளியாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது".
 

மற்றொரு ரசிகர் இந்த படம் ஒரு டீசண்ட் முயற்சி என கூறி 3 ஸ்டார்கள் கொடுத்துள்ளார். நயன்தாரா, சித்தார்த், மாதவன் ஆகியோர் இந்த படத்தின் தங்களின் பங்களிப்பை அதிகள் வழங்கி உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
 

ஒரு ரசிகை டெஸ்ட் படம் குறித்து மிகவும் அழகாக தன்னுடைய விமர்சனத்தை கூறியுள்ளார். அதாவது "சில படங்களில், உங்கள் கவனத்தை முழுவதுமாக ஈர்ப்பது நடிகர்களின் நடிப்புகள்தான் - அதுதான் டெஸ்ட் படத்தை ஒரு சிறந்த படமாக மாற்றியுள்ளது.

நயன்தாரா, சித்தார்த் மற்றும் குறிப்பாக மாதவனின் நடிப்பு திரைக்கதையை தூக்கி பிடித்துள்ளது.

ஒரு வரலாற்று கிரிக்கெட் போட்டியின் போது ஒன்று கூடும் மூன்று கதாபாத்திரங்களைச் சுற்றி கதை சுழல்கிறது, இறுதியில் அவர்கள் வாழ்க்கையை மாற்றும் முடிவுகளை எடுக்க கட்டாயப்படுத்த படுகிறார்கள். இது மனித இயல்பில் உள்ள சாம்பல் நிற நிழல்களை ஆராய்கிறது. இருப்பினும், படம் சுவாரஸ்யமாகத் தொடங்கினாலும், அது விரைவில் கவனத்தை இழக்கிறது, மேலும் குழப்பமான கதைசொல்லல் அதன் ஒட்டுமொத்த தாக்கத்தை நீர்த்துப்போகச் செய்கிறது என தெரிவித்துள்ளார்.

மற்றொரு விமர்சனமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. ஸ்கிரீன் பிளே சுமாராக உள்ளது. படம் டீசண்டாக உள்ளது என துவங்கி. " கதைக்களம், திரும்ப கம்பேக் கொடுத்து கிரிக்கெட்டில் ஜெயிக்க நினைக்கும் எலைட் ஹீரோவை பற்றியும், என்ன ஆனாலும் பரவால நாம நினைச்ச நீர் எரிபொருள் கண்டுபிடிப்ப மக்கள் கிட்ட கொண்டு சேர்க்கனும்னு நினைக்ற ஓர் POOR ECONOMY ஹீரோ... இவங்க ரெண்டு பேரும் நினைத்ததை சாதித்தார்களா..? என்பது தான் கதைக்களம்.

திரைக்கதையில்,  உயிரோட்டம் இல்லாமல் FLAT-டாக இருக்கிறது, படத்தோட கதை இது தான் என்பதை சொல்ல 1 மணி நேரம் ஆகுது . WRITING கனமா இல்ல ஆனால் சில டயலாக்ஸ் நல்லாருந்து. கதைக்களமும், கதாபாத்திரத்தை உருவாக்கிய விதமும் நன்றாக இருந்தாலும் ஸ்கிரீன் பிளே சாதாரணமாக உள்ளது.

இதை ஒரு ஸ்போட்ஸ் டிராமா அப்படினு நினைச்சு பார்க்காதிங்க. இது ஓர் எமோஷ்னல் த்ரில்லர். மாதவன் கேரக்டர் ஓரளவுக்கு நல்லாருந்தது, பட் சிதாரத் கேரக்டர் நல்லா எழுதிருக்லாம். எல்லாருமே அசால்ட்டுதனமா நடிச்சிருக்க ஃபீல் வந்துது. அப்படினு சொல்லி இருக்காங்க. 

மொத்தத்தில் இப்படம் சுமாரான விமர்சனம் மட்டுமே கிடைத்து வருகிறது. ஒருவேளை இப்படம் தியேட்டரில் வெளியாகி இருந்தால் கூட தோல்வியை சந்திக்க நிறைய வாய்ப்பு உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதே பாஜக விருப்பம்..! இயக்குநர் பா.ரஞ்சித் குற்றச்சாட்டு!
மம்மூட்டியின் ‘களம்காவல்’ மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ