
தமிழ் திரையுலகின், குணச்சித்திர வேடத்தில் கூட வெரைட்டி காட்டி நடித்து வருபவர் சத்யராஜ். இவரை போலவே காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் தான் காளி வெங்கட். இவர் முதன்மை கதாபாத்திரங்களில் தற்போது நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ' மெட்ராஸ் மேட்னி ' என பெயரிடப்பட்டுள்ளது.
அதன் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்தத் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், உருவாகியுள்ள' மெட்ராஸ் மேட்னி' திரைப்படத்தில் காளி வெங்கட் ,ரோஷினி ஹரிப்பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தோக், சுனில் சுகதா, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் (Kali Venkat Starring in ‘Madras Matinee’ Directed by Karthikeyan Mani). இவர்களுடன் நடிகர் சத்யராஜ் அறிவியல் சார்ந்த புனைவு கதை எழுதும் மூத்த எழுத்தாளராக நடிக்க உள்ளார். ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலஸ்ரங்கன் இசையமைத்துள்ளார். ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இந்த படத்தை 'அருவி', 'ஜோக்கர்', 'கைதி' போன்ற திரைப்படங்களை வழங்கிய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது. மேலும் இந்தத் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும், இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் படியான ஒரு பொழுது போக்கு படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.