Tamil Film Producer Ramanathan Passed Away : சத்யராஜிற்கு மேனேஜராக இருந்த தமிழ் பட தயாரிப்பாளர் ராமநாதன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருந்தவர் ராமநாதன். பல ஆண்டுகளாக நடிகர் சத்யராஜூவுடன் மேலாளராக பணியாற்றிய இவர், சத்யராஜ் நடிப்பில் வெளியான வாத்தியார் வீட்டு பிள்ளை, வள்ளல், நடிகன், திருமதி பழனிச்சாமி, பிரம்மா, வில்லாதி வில்லன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.
தயாரிப்பாளர் ராமநாதன், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவர் மரணமடைந்தார். 72 வயதாகும் ராமநாதனுக்கு, பிரமிளா என்ற மனைவியும், காருண்யா, சரண்யா என இரு மகள்களும் உள்ளனர்.
மகள்கள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்கள் சென்னை திரும்பியதும், நாளை மறுநாள் 9ஆம் தேதி ராமநாதனின் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ராமநாதன் மறைவுக்கு, ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.