இந்த நடிகருக்கு வயசாயிடுச்சி...!முன்னணி நடிகர் படத்தில் நடிக்க மறுத்த அதிதி ராவ்...!

 
Published : Feb 16, 2018, 03:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
இந்த நடிகருக்கு வயசாயிடுச்சி...!முன்னணி நடிகர் படத்தில் நடிக்க மறுத்த அதிதி ராவ்...!

சுருக்கம்

athithi rav avoid telungu actor vengatesh movie

'ஸ்ரீநகரம்' படத்தை தொடர்ந்து 10 வருட இடைவெளிக்கு பின் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை' படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தவர் நடிகை அதிதி ராவ். இந்த படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக உள்ள படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான 'பத்மாவத்' படத்திலும் அவர் மெகருன்னிஷாவாக நடித்திருந்தார். மேலும் தெலுங்கில் சுதீர் பாபுவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் இவரிடம் இயக்குனர் தேஜாஸ் இயக்கத்தில் பிரபல நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அதற்கு அதிதி ராவ் நடிகர் வெங்கடேஷ் வயதை கருத்தில் கொண்டு இந்த பட வாய்ப்பை தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தற்போது இந்த வாய்ப்பு  பல நாட்களாக பட வாய்ப்பு இல்லாமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு பல இயக்குனர்களுக்கு கொக்கி போட்டு வந்த நடிகை ஸ்ரேயாவுக்கு சென்றுள்ளது. முன்னணி நடிகர் வெங்கடேஷ் சீனியர் ஹீரோ என்பதால் தான் அதிதி ராவ் இவருடன் நடிக்க மறுத்ததாக பரவி வரும் தகவல் டோலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியல் ஆழ்த்தியுள்ளது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!