
தீப்தி காப்சி:
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை 'தீப்தி காப்சி'. இவர் 'ஹனி ஹனி இப்பானி', 'ஜீவலம்தம்', உள்ளிட்ட பல கன்னட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும் கன்னடத்தில் பிரபல நடிகராக உள்ள உப்பேந்திராவுடனும் நடித்துப் பிரபலமானவர்.
குறுந் தகவல்:
இந்நிலையில் நடிகை தீப்தியின் 'வாட்ஸ்- அப்' எண்ணுக்கு ஒரு வாலிபர் குறுந்தகவல் அனுப்பி இருந்தார். அதில், விபச்சார தொழியில் ஈடுபடும் அழகான இளம்பெண்கள் தேவை என்றும், அவ்வாறு இருந்தால் தனக்கு தெரிவிக்கும்படியும் அனுப்பப்பட்டிருந்தது.
அதிர்ச்சியில் தீப்தி:
இந்த குறுந்தகவலை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த நடிகை தீப்தி, அந்த வாலிபருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக "நீங்கள் அனுப்பிய குறுந்தகவலை எனது முகநூலில் வெளியிடுவேன். உங்களை, யாரும் தொடர்புக் கொள்ளாவிட்டால் நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள பெண் உறுப்பினர்களை அனுப்புங்கள். இதன்மூலம் உங்களது பணமும் மிச்சமாகும். நன்றி எனக் பதில் கொடுத்தார்.
உடனே அந்த வாலிபர் தெரியாமல் இந்த குறுந்தகவல் அனுப்பி விட்டதாக தீப்திக்கு பதில் கொடுத்தார்.
போலீசில் புகார்:
இப்படி கேவலமான குறுந்தகவல் அனுப்பிய வாலிபருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அந்த வாலிபர் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பிய குறுந்தகவலையும், அதற்கு பதிலடி கொடுத்த குறுந்தகவலையும் புகைப்படம் எடுத்து தன்னுடைய முக நூலில் தீப்தி வெளியிட்டார். மேலும் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திலும் இந்த வாலிபர் மீது புகார் கொடுக்க தீப்தி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.