கோயிலும் குப்பை மேடும் ஒன்றுதான்......ஜோதிகாவின் அடுத்த அதிரடி

 
Published : Feb 16, 2018, 12:06 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
கோயிலும் குப்பை மேடும் ஒன்றுதான்......ஜோதிகாவின் அடுத்த அதிரடி

சுருக்கம்

jothika next controvercy word

கெட்ட வார்த்தை

பாலா இயக்கத்தில் ஜோதிகா ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து வரும் படம் நாச்சியார்.
இந்த படத்தின் டீசர் வெளியாகி மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.காரணம் இதில் ஜோதிகா பேசிய வசனம்தான்.ஜோதிகா அதில் கெட்ட வார்த்தையை பேசியிருப்பார்.இது விவாதத்துள்ளாகியது.மேலும் ஜோதிகாவை இப்படியெல்லாம் பேச வேண்டாம் என்று ரசிகர்கள் விமர்சித்தனர்.

பெண் பேசுவதால் விவாதம்

இதுபற்றி விளக்கம் அளித்த ஜோதிகா நாச்சியார் டீசரில் நான் பேசியது கெட்ட வார்த்தைத்தான்.அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அந்த வார்த்தையை நிறைய படங்களில் நிறைய ஆண்கள் பேசியிருக்கிறார்கள். ஒரு பெண் முதல்முறையாக அப்படி பேசுவதால் அது விவாத பொருளாக மாறியிருக்கிறது. படத்தில் அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற வசனம் அது. இன்னும் கொஞ்சம் டயலாக் சேர்த்து பேசணும்.நான் கொஞ்சம் குறைத்து பேசியிருக்கிறேன்.படத்தில் குறிப்பிட்ட சூழலில் அந்த வசனம் வரும் போது அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என  நம்புகிறேன் என்று கூறியிருந்தார். 

கோவில், குப்பை மேடு

இந்நிலையில் இப்படத்தின் புரோமோ வீடியோ நேற்று வெளியானது. அதில் ஒரு காட்சியில் எங்களுக்கு கோவிலும், குப்பை மேடும் ஒன்னுதான் என கூறும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதேபோல் அனைத்து மதங்களின் பாடல்களும் ஒலிக்கின்றன.

எனவே இந்த காட்சிக்கு கண்டிப்பாக மதம் சார்ந்த பிரச்சினைகள் வரும்.மதவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!