டாப் ஹீரோஸ் விஜய் ஆண்டனியை பார்த்து கத்துக்கோங்க... தயாரிப்பாளர்கள் வயிற்றில் பால் வார்த்த அசத்தல் அறிவிப்பு!

By Kanimozhi PannerselvamFirst Published May 5, 2020, 1:57 PM IST
Highlights

இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இருமடங்காக அதிகரித்து வருகிறது. அந்த கொடூர வைரஸிடம் இருந்து மக்களை காப்பதற்காக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமாத்துறை மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. சினிமா, வெப் தொடர், சீரியல் என அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தவைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: 

தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் புது படங்கள் எதுவும் ரிலீச் ஆகாமல் உள்ளன. இதனால் ஒட்டுமொத்த கோலிவுட்டிற்கே 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து மனு அளித்துள்ளனர். அதில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு மட்டுமாவது அனுமதி அளிக்கும் படி கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சின்னத்திரை சார்பிலும் படப்பிடிப்பை நடந்த அனுமதிகோரி அரசுக்கு மனு அளித்துள்ளனர். 

இதையும் படிங்க: கணவருடன் ஓவர் நெருக்கம்... சாய் பல்லவி நடிப்பை பார்த்து பொறாமைப்பட்ட சமந்தா?

மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கினாலும் கொரோனா பிரச்சனையால் சீர்குலைந்துள்ள பொருளாதாராம் மீண்டும் சீரானால் மட்டுமே மக்கள் பழைய படி சினிமாவிற்கு ஆதரவு கொடுக்க முன் வருவார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். விஜய் ஆண்டனி தற்போது பெப்ஸி சிவா தயாரிப்பில் ‘தமிழரசன்’,  அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘அக்னிச் சிறகுகள்’ , ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘காக்கி’ ஆகிய 3 படங்களில் நடித்து வருகிறார். 

சம்பளத்தைக் குறைக்க முதலில் முன்வந்த விஜய் ஆண்டனி பற்றி தயாரிப்பாளர் ஜேஎஸ்கே

Salute Sir pic.twitter.com/4x8Df8Jynk

— Actor Kayal Devaraj (@kayaldevaraj)

இதையும் படிங்க: விஜய்சேதுபதி ஒரு “தெலுங்கர்” என வீடியோ போட்டு உலகிற்கே சொன்ன கமல்....!

இதுகுறித்து ஜேஎஸ்கே பிலிம்ஸ் தயாரிப்பாளர் சதீஷ்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு நேரத்தில் நடிகர் விஜய் ஆண்டனி தானே முன்வந்து 25 சதவீத சம்பளத்தை விட்டுக்கொடுத்துள்ளார். பல கோடி நன்றிகள், மகிழ்ச்சி. முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தாமாகவே முன்வந்து சம்பளத்தை குறைத்துக் கொண்டால் தயாரிப்பாளர்கள் சுமையை கொஞ்சம் குறைக்க உதவும் என ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தோம். அதை ஏற்றுக்கொண்ட விஜய் ஆண்டனிக்கு மனதார நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். 
 

click me!