துப்பாக்கியை கையில் வைத்து அப்பாவுடன் போலீஸ் விளையாட்டு! இந்த முன்னணி நடிகர் யார் தெரியுமா?

Published : May 05, 2020, 01:29 PM ISTUpdated : May 05, 2020, 01:36 PM IST
துப்பாக்கியை கையில் வைத்து அப்பாவுடன் போலீஸ் விளையாட்டு! இந்த முன்னணி நடிகர் யார் தெரியுமா?

சுருக்கம்

பிரபல நடிகர் ஒருவர், சிறு வயதில் தன்னுடைய போலீஸ் அப்பாவுடன் சேர்ந்து போலீஸ் விளையாட்டு விளையாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  

பிரபல நடிகர் ஒருவர், சிறு வயதில் தன்னுடைய போலீஸ் அப்பாவுடன் சேர்ந்து போலீஸ் விளையாட்டு விளையாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கொரோனா பிரச்சனையின் காரணமாக இந்தியா முழுவதும் போடப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக, பிரபலங்கள் அனைவரும் அவ்வப்போது, தங்களுடைய பழைய புகைப்படங்களை பதிவிட்டு, இனிமையான நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வரும் நிலையில், பிரபல நடிகர் விஷ்ணு விஷால், தன்னுடைய போலீஸ் அதிகாரி அப்பாவுடன் போலீஸ் கெட்டப்பில், எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு, 'ராட்சசன்' திரைப்படம் வெளியாகி வெற்றிபெற்றது. கடந்த ஆண்டில் இவர் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை என்றாலும், இந்த ஆண்டில் அடுக்கடுக்காக இவரின் படம் வெளியாக தயாராக இருந்தது.

மேலும் செய்திகள்: அம்மாவின் பட்டு புடவையை வித்தியாசமாக கட்டி போட்டோ ஷூட்! நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு குவியும் லைக்ஸ்!
 

ஆனால் இந்த கொரோனா பிரச்சனை திரைத்துறையை விட விஷ்ணு விஷாலை தான் வேகமாக சுழட்டி அடித்துள்ளது. பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்த “காடன்” திரைப்படமும், எழில் இயக்கத்தில் நடித்த “ஜகஜால கில்லாடி“ படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் அனைத்தும்  மூடப்பட்டதால், இரண்டு படங்களையும் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.

அடுத்து மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் “எஃப்ஐஆர்” படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கும் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து களவு படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்கத்தில் “மோகன்தாஸ்” என்ற படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளார். 

மேலும் செய்திகள்: பிரபல இளம் நடிகர் விபத்தில் சிக்கி மரணம்! சோகத்தில் ரசிகர்கள்!
 

கொரோனா அச்சம் உலகையே உலுங்கி வரும் இந்த சமயத்தில் அடுத்த படத்தின் டைட்டிலை அறிவிக்கலாமா என்று ரசிகர்களிடம் விஷ்ணு விஷால் கருத்து கேட்டிருந்தார். பெரும்பாலான ரசிகர்கள் ஓ.கே. சொன்னதை அடுத்து “மோகன்தாஸ்” படத்தின் டைட்டில் டீசரை விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

டீசரின் ஆரம்பத்திலேயே விஷ்ணு விஷால் சுத்தியால் யாரையோ ஆக்ரோஷமாக தாக்குகிறார். அப்படியே ரத்தம் சொட்ட, சொட்ட சுத்தியை எடுத்துக்கொண்டு  விஷ்ணு விஷால் நடந்து செல்வது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. கதிகலங்க வைக்கும் இந்த டீசரை பார்க்கும் போதே முழுக்க, முழுக்க த்ரில்லர் கதை என்பது தெளிவாகிறது. 

மேலும் செய்திகள்: ஏழை ரசிகரின் வீட்டில் டீ குடித்த அஜித்! தயங்கி நின்றவருக்கு இன்ப அதிர்ச்சி! புகைப்படத்தோடு வெளியிட்ட பிரபலம்!
 

இப்படி எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உள்ள பல படங்கள் இவரின் கை வசம் இருந்தாலும், கொரோனா  பிரச்சனை அனைத்தையும் கொலாப்ஸ்  செய்து விட்டது. 

இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக, காதலி ஜுவாலா கட்டவை கூட சந்திக்காமல், சமூக இடைவெளியோடு தனிமையில் இருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு தன்னுடைய பழைய புகைப்படத்தை காட்டி, இனிமையான நினைவுகளை அசைபோட்டு வருகிறார் விஷ்ணு...

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?