‘என்னை மாதிரி சோம்பேறியை ரிலீஸ் தேதியை முடிவு பண்ணிட்டுக் கொல்றாங்கண்ணே’...’அசுரன்’வெற்றிமாறன்...

By Muthurama LingamFirst Published Oct 4, 2019, 4:01 PM IST
Highlights

‘அசுரன்’ திரைப்படத்தின் விளம்பரத்தில் ஃபைட் மாஸ்டருக்கும், கவிஞருக்கும் மத்தியில் மாட்டிக் கொண்டு முழித்துக் கொண்டிருக்கும் என் பெயரைப் பார்த்து யாரும் பதற்றமடையத் தேவையில்லை. இறையருளால் அவர்கள் இருவரையும் நான் சந்திக்கவே இல்லை.எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை மூலக்கதையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் ‘அசுரன்’ திரைப்படத்தின் வசனப்பகுதியை நானும், தம்பி வெற்றி மாறனும் எழுதியிருக்கிறோம். வசனம் போக இந்தத் திரைப்படத்தில் எனது பிற பங்களிப்பை 4 ஆம் தேதி திரையில் பார்க்கும் போது உணரலாம். ‘அசுரன்’ வேறொரு திருநவேலி திரைப்படம்.

இன்று ரிலீஸாகியுள்ள வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியின் ‘அசுரன்’சூப்பர் ஹிட் ஆகியுள்ள செய்தி அடுத்தடுத்த செய்திகளால் கன்ஃபர்ம் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தில் வெற்றிமாறனுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார் இயக்குநரும் ‘அசுரன்’பட வசனகர்த்தாவுமான சுகா என்கிற சுரேஷ். இயக்குநர் பாலுமகேந்திரா ஆசானின் பள்ளியில் வெற்றிமாறனுக்கு சீனியர் சுகா. அதாவது நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் எஃபெக்ட்.

சுகாவின் அப்பதிவு இதோ,...அசுரனும், நானும் ...‘அசுரன்’ திரைப்படத்தின் விளம்பரத்தில் ஃபைட் மாஸ்டருக்கும், கவிஞருக்கும் மத்தியில் மாட்டிக் கொண்டு முழித்துக் கொண்டிருக்கும் என் பெயரைப் பார்த்து யாரும் பதற்றமடையத் தேவையில்லை. இறையருளால் அவர்கள் இருவரையும் நான் சந்திக்கவே இல்லை.எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை மூலக்கதையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் ‘அசுரன்’ திரைப்படத்தின் வசனப்பகுதியை நானும், தம்பி வெற்றி மாறனும் எழுதியிருக்கிறோம். வசனம் போக இந்தத் திரைப்படத்தில் எனது பிற பங்களிப்பை 4 ஆம் தேதி திரையில் பார்க்கும் போது உணரலாம். ‘அசுரன்’ வேறொரு திருநவேலி திரைப்படம்.

ஒரு  காணொளியில் வெற்றிமாறன் சொல்வதுதான்  படம் முழுக்கவே நடந்தது. படப்பிடிப்பை ஏற்பாடு செய்து விட்டு என்னிடம் வசனப்பகுதிகளை எழுதி அனுப்பச் சொல்லிக் கேட்பார். பதற்றமாகி விடும். கடுமையாகத் திட்டுவேன். அதையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்திக் கொள்ளாமல் ‘அண்ணே! அதெல்லாம் நீங்க அனுப்பியிருவீங்க. எனக்குத் தெரியும்’ என்று ஃபோனை வைத்து விடுவார். அவசர சூழல் காரணமாக படமாக்க வேண்டிய சில காட்சிகளுக்கான வசனப்பகுதியை அவரே எழுதி படமாக்கிவிட்டார். அவற்றை டப்பிங்கில் சிரமப்பட்டு மாற்ற வேண்டியிருந்தது. நாட்கள் நெருங்க நெருங்க இரவுபகலாக வேலை செய்ய வேண்டியிருந்தது. சில நாட்கள் முதல் நாள் காலை ஆரம்பித்த பணி மறுநாள் நள்ளிரவு வரை தொடர்ந்தது. ‘என்னை மாதிரி சோம்பேறியை ரிலீஸ் தேதியை முடிவு பண்ணிட்டுக் கொல்றாங்கண்ணே’ என்பார் வெற்றி மாறன். ‘அடேய்! சோம்பேறிகள் சங்கத் தலைமைப் பொறுப்புல இருக்கற நானே வேலை செய்றேன். உனக்கென்னடா? ஓடு எடிட்டிங்குக்கு. எனக்கு வேலை இருக்கு’ என்று டப்பிங் ரூமிலிருந்து அவரை விரட்டுவேன். தனுஷுக்கு மட்டும் நான் பேசி அனுப்பிய டிராக் லண்டனுக்குச் சென்றது. அதை அங்கிருந்தே பேசி அனுப்பினார். 

மஞ்சு வாரியர், பசுபதி, பவன், ‘ஆடுகளம்’ நரேன், கென் கருணாஸ், பாலாஜி சக்திவேல், மூணார் ரமேஷ் உட்பட அனைவரையும் வைத்து ஓய்வில்லாமல் டப் செய்ய வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் டப்பிங் ஸ்டூடியோவின் ஒரு மூலையில் அமர்ந்து கண் மூடி சில மணித்துளிகள் மட்டும் அமர்ந்திருப்பேன். அதுதான் உறக்கம். ‘ஸார் ஸார்!’ சொப்பனத்தில் குரல் கேட்கும். திடுக்கிட்டு எழுந்து ‘ஆங். மூணாவது ரீல் போடுங்கப்பா’ என்பேன். இன்றைய ரிலீஸ்க்கு நேற்று முன் தினம் வரைக்கும் உழைக்க வேண்டியிருந்தது. எந்த விதத்திலும் வெற்றி மாறன் என்னை தொந்தரவு செய்யவே இல்லை.

இப்போது வெற்றிமாறனிடமிருந்து ஃபோன் வந்தது. ‘அண்ணே!’ என்றான். இத்தனை ஆண்டுகளில் தம்பி வெற்றி மாறனிடம் நான் கேட்காத ‘அண்ணே’.
‘நீ என்ன சொல்ல வர்றேன்னு புரியுது. சந்தோஷம்டா’ என்றேன்.

click me!