
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பைனலுக்கு சொல்லுபவர்கள் பெயர் பாட்டிலில் இடம்பெற்றுள்ள பிரபலங்களில் ஒருவர் லாஸ்லியா. இவருக்கு நிகழ்ச்சி துவங்கப்பட்ட ஆரம்பத்தில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்த நிலையில், நாட்கள் செல்ல செல்ல இவர் நடிக்கிறாரா என்கிற எண்ணம் மக்களுக்கு வந்து விட்டது. எனினும் லாஸ்லியா கவினை காதலிப்பது போல் நடந்து கொள்வதால், கவினின் ரசிகர்களும் இப்போது லாஸ்லியாவிற்கு ஆதரவாக செயல் பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள, ப்ரோமோவில்.. லாஸ்லியா தன்னுடைய அப்பாவிடம் ஏர்டெல் 4 G மூலம் பேசும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
இந்த புரோமோவில், லாஸ்லியா அப்பா என சிரித்த முகத்தோடு பேச துவங்கினாலும் கடைசியில் அழுகையில் தான் முடிக்கிறார். லாஸ்லியாவின் தந்தை நல்ல இருக்கியா? சந்தோஷமாக இரு என தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறார்.
பின் ஏன் என தெரியவில்லை. எதோ பேச வாயை எடுத்த லாஸ்லியா... திடீர் என வெளியில் வந்ததும் எல்லாத்தையும் சொல்கிறேன் என கதறி அழுது தன்னுடைய பேச்சை முடிக்கிறார்.
அந்த புரோமோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.