சினிமா துறையை இழுத்து  மூடுங்க !! கந்து வட்டிக்கு எதிராக கொந்தளித்த இயக்குநர் அமீர் !!!

 
Published : Nov 22, 2017, 08:25 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
சினிமா துறையை இழுத்து  மூடுங்க !! கந்து வட்டிக்கு எதிராக கொந்தளித்த இயக்குநர் அமீர் !!!

சுருக்கம்

asokekumar sucide problem...director ameer press meet

கந்துவட்டி கொடுமைக்கு ஒரு முடிவு கட்டவில்லை என்றால்  சினிமா துறையை இழுத்து மூட வேண்டியது தான் என்றும், இப்பிரச்சனையை தீர்க்க முடியாதவர்கள் சங்க நிர்வாகிகளாக இருப்பதற்கு தகுதியே கிடையாது என்றும் இயக்குநர் அமீர் காட்டமாக தெரிவித்துள்ளார். 

சுப்ரமணியபுரம் படத்தன் இணை தயாரிப்பாளரும், இயக்குர் சசிகுமாரின் மைத்துனருமான  அசோக்குமார், சென்னையில் வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஆற்காடு சாலை தனியார் அபார்ட்மெண்ட் ஒன்றில் திடீரென நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன், கந்துவட்டியால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மதுரை பைனான்சியர் அன்பு செழியனிடம் வாங்கிய பணத்துக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு மேல் பல லட்சங்கள் வட்டியாக கொடுத்திருந்தும் தொடர்ந்து கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாகவும், தன்னையும் தனது குடும்பத்தினரையும் கேவலமாக அன்பு செழியின் மிரட்டுவதாகவும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். தான் மட்டுமல்லாமல் இயக்குநர் சசிகுமாரும் அன்புசெழியனால் மிரட்டப்படுவதாகவும் அசோக்குமார் எழுதி வைத்திருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் திரைப்படத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர்கள்  அமீர், கரு.பழனியப்பன் ஆகியோர் மறைந்த அசோக்குமாரின் உடலைக் பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய , அசோக்குமாரின் தறகொலைக்கு காரணமான அன்பு செழியன் மீது 306-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.

தற்போது கந்துவட்டி கொடுமையால் சினிமாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் பிரச்னைகளை வெளியில் சொல்வதில்லை என்றும் அமுர் குறிப்பிட்டார்.

கந்துவட்டி கொடுமைக்கு முடிவு கட்டவில்லையென்றால் சினிமா துறையை இழுத்து மூடவேண்டியதுதான என்றும்  தயாரிப்பாளர் சங்கமும், விநியோகஸ்தர்கள் சங்கமும் இதுகுறித்து கலந்துஆலோசிக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கந்துவட்டி பிரச்சனைக்கு  முடிவு கட்டமுடியாதவர்களுக்கு சங்க நிர்வாகிகளாக இருப்பதற்கு தகுதி கிடையாது என்றும் அமீர் காட்டமாக தெரிவித்தார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!