கந்துவட்டி கும்பல்களே சினிமாவில் இருந்து ஓடி விடுங்கள்  !! விஷால் கடும் எச்சரிக்கை !!!

 
Published : Nov 22, 2017, 08:04 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
கந்துவட்டி கும்பல்களே சினிமாவில் இருந்து ஓடி விடுங்கள்  !! விஷால் கடும் எச்சரிக்கை !!!

சுருக்கம்

vishal warning

கந்துவட்டி கும்பலுக்கு விரைவில் முடிவு கட்டுவோம் என்றும்  தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சக தயாரிப்பாளர்கள் பிரச்னை இல்லாமல் தொழில் புரிய கூடிய சூழ்நிலை உருவாகத் தான் பாடுபடுக்கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ள விஷால், கந்து வட்டிக்கு அசோக் குமாரே கடைசி பலியாக இருக்கட்டும் என தெரிவித்துள்ளார்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் சசிகுமாரின் படத் தயாரிப்பு நிறுவனமான கம்பெனி புரொடக்சன்ஸ் . நிறுவனத்தில் நிர்வாகியாகவும், சசிகுமாரின் படங்களின் இணை தயாரிப்பாளராகவும் இருந்த அசோக்குமார் கந்துவட்டி கொடுமை காரணமாக நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார்

இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தலைவர் நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்ததாக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது கந்துவட்டி இன்று திரைத்துறையிலும் ஒரு உயிரை பலி வாங்கியிருக்கிறது.எந்த ஒரு பிரச்னைக்குமே தற்கொலை தீர்வாகாது. கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் உடனடியாக சங்கத்தை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்ற தயாராக இருக்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கந்துவட்டி கும்பலுக்கு விரைவில் முடிவு கட்டுவோம் என்றும் . தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சக தயாரிப்பாளர்கள் பிரச்னை இல்லாமல் தொழில் புரிய கூடிய சூழ்நிலை உருவாக பாடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு என்ற பெயரில் தயாரிப்பாளர்களை மிரட்டும் கந்துவட்டி கும்பலுக்கும் கட்டப்பஞ்சாயத்து நபர்களுக்கும் நேரடி எச்சரிக்கை விடுவதாகவும்,  இனியாவது திருந்தி தமிழ் சினிமாவில் இருந்து ஓடி விடுங்கள். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும என விஷால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தற்கொலைஅல்ல.கொலை. இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் உடனடியாக காவல்துறை கைது செ ய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களோ அல்லது தயாரிப்பாளர்களோ,  நேர்மையான அசோக் குமார் போல இன்னொரு அப்பாவி பலியாகாத அளவுக்கு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்றும் விஷால் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்