திரில்லர் ஜார்னரில்... உருவாகும் 'போர் தோழி' ! இளம் நடிகரோடு கை கோர்த்து மிரட்ட வரும் சரத்குமார்!

Published : Apr 18, 2023, 08:55 PM IST
திரில்லர் ஜார்னரில்... உருவாகும் 'போர் தோழி' ! இளம் நடிகரோடு கை கோர்த்து மிரட்ட வரும் சரத்குமார்!

சுருக்கம்

நடிகர் சரத்குமார் 'பொன்னியின் செல்வன்' வெற்றிக்கு பின்னர், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பேசும்படியான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வரும் நிலையில், தற்போது 'போர் தொழில்' என்னும் படத்தில், இளம் நடிகரோடு இணைந்துள்ளார். இப்படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.   

சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் 'போர் தொழில்' எனும் திரைப்படத்தினை தயாரித்திருப்பதன் மூலம், இந்தியாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் தமிழ் திரையுலகில் நேரடியாக களமிறங்கியிருக்கிறது.

வித்தியாசமான கதைக்களத்துடன் கூடிய படைப்புகளை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனம் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட். இந்நிறுவனம் இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புலனாய்வு திரில்லர் ஜானரிலான 'போர் தொழில்' எனும் திரைப்படத்தை தயாரித்து வெளியிடுகிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

தயாரிப்பாளர்கள் இப்படத்தின் டைட்டிலை இன்று வெளியிட்டிருக்கிறார்கள். இதற்காக பிரத்யேகமான காணொளி ஒன்றையும் உருவாக்கி வெளியிட்டிருக்கின்றனர். 'போர் தொழில்' எனும் தலைப்பு, 'ஆர்ட் ஆஃப் வார்' என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியிட தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரில்லர் அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கின்றனர்.

கேரள புடவையில் கும்முனு இருக்கும் நயன்தாரா.! விக்னேஷ் சிவனுடன் விஷு கொண்டாடிய லேட்டஸ்ட் போட்டோஸ்!

இந்நிறுவனம் இதற்கு முன் 'ஹம்பிள் பொலிட்டீசியன் நோக்ராஜ் (கன்னடம்), வதம் (தமிழ்), குருதிக்காலம் (தமிழ்),  இரு துருவம் (தமிழ்) உள்ளிட்ட பல பிரபலமான இணையத் தொடர்களை தயாரித்து வழங்கி உள்ளது. மேலும் இந்நிறுவனம், தென்னிந்திய பொழுதுபோக்குத்துறை சந்தையில் மாறுபட்ட உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான வலுவான அர்ப்பணிப்புடன் பல்வேறு மொழிகளில் திரைப்படம் மற்றும் பிரத்யேக இணைய தொடர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. 

ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு முயற்சியாக தொடங்கப்பட்டிருக்கும் இந்நிறுவனத்திற்கு, பொழுதுபோக்கு துறையில் அனுபவசாலியான சமீர் நாயர் தலைமை ஏற்றிருக்கிறார். 'ருத்ரா: தி எட்ஜ் ஆஃப் டார்க்னஸ்' , 'மித்யா', கிரிமினல் ஜஸ்டிஸ் , ஸ்கேம் 1992 : தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி'  போன்ற நிகழ்ச்சிகளை அனைத்து மொழிகளிலும் தயாரித்து வெளியிட்டது.  'உண்டேகி', 'பௌக்கால்' என பலரின் பாராட்டுகளையும் பெற்ற படைப்புகளையும் வழங்கி இருக்கிறார்கள். 

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த நடிகர் சிம்பு! விஜய் பாணியில் பிரியாணி விருந்து வைத்து அமர்க்களம்... போட்டோஸ்

நடிகை நந்திதா தாஸ் இயக்கத்தில் கபில் சர்மா நடித்த திரைப்படமான 'ஸ்விகாடோ' சமீபத்தில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்றது. அபர்ணா சென் இயக்கிய 'தி ரேப்பிஸ்ட்', சமீபத்தில் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, மதிப்புமிகு கிம் ஜிஜோக் விருதை வென்றது. தற்போது 'சர்மாஜி கி பேட்டி' மற்றும் ' ஜப் குலீ கிதாப்' என பல படைப்புகளை திரையரங்கம் மற்றும் டிஜிட்டல் தளங்களில் நேரடியாக வெளியிட கூடிய வகையில் தயாரித்து வருகிறது. மேலும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்- 'நெட்ப்ளிக்ஸ்', 'டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்', 'அமேசான் பிரைம் வீடியோ', 'சோனி லைவ்', 'எம் எக்ஸ் பிளேயர்', 'ஜீ 5 'மற்றும் 'வூத் செலக்ட்' போன்ற முன்னணி டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களுடன் ஆக்கபூர்வமான கூட்டணியை அமைத்துள்ளது.

தென்னிந்திய மொழிகளிலும் 45 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் பயணித்து வரும் முகேஷ் மேத்தா, அனில் ராதாகிருஷ்ணன் இயக்கிய 'நார்த் 24', 'காதம்' போன்ற படங்களின் உள்ளடக்க விசயங்களில் சாதனை படைத்த சி. வி. சாரதியுடன் இணைந்து செயல்படும் தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் தயாரித்த பல திரைப்படங்கள் தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்றிருக்கிறது. துல்கர் சல்மான் நடிப்பில் சமீர் தய்யார் இயக்கிய 'NAPKCB', பாசில் ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடித்த 'கோதா', மலையாளத்தில் ஜெய் கிரிஷ் இயக்கத்தில் பிருதிவிராஜ் சுகுமாரன் நடித்த 'எஸ்ரா' மற்றும் தமிழில் துருவ் விக்ரம் நடிகராக அறிமுகமான 'ஆதித்யா வர்மா' உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சிறு இடைவெளிக்கு பின்னர் மீண்டும், தமிழில் இந்நிறுவனம் படம் தயாரிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

மாடல்களை வைத்து விபச்சாரம்... 27 வயது மாதவன் பட நடிகை அதிரடி கைது! திரையுலகில் பரபரப்பு..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Actress Urvashi : மகளுடன் கமலை சந்தித்த ஊர்வசி! அம்மாவின் அழகை மிஞ்சும் மகளின் ப்யூட்டிபுள் போட்டோஸ்
Dhanush Net Worth : விளம்பரத்திற்கே கோடிகளில் சம்பளம்.. வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர வீடு, கார்கள்.. தனுஷின் சொத்து மதிப்பு இவ்வளவா?