செம்ம மாஸ்... ஜூனியர் என்.டி.ஆருக்கு வில்லனாகும் பாலிவுட் நடிகர்!

By manimegalai a  |  First Published Apr 18, 2023, 6:11 PM IST

'என்டிஆர் நடிக்கும் 30 ஆவது படத்தில், அவருக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் இணைந்துள்ளார்.இது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
 


தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் அதிகாரப்பூர்வமாக 'என்டிஆர் 30’ படக்குழுவில் இணைந்துள்ளார். மேலும் கதாநாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் மூலம் ஜூனியர் என்டிஆர்  மற்றும் சைஃப் அலிகான் இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர்.  

Tap to resize

Latest Videos

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த நடிகர் சிம்பு! விஜய் பாணியில் பிரியாணி விருந்து வைத்து அமர்க்களம்... போட்டோஸ்

’NTR 30’ திரைப்படம்  தெலுங்கு மொழியில் அதிகம் எதிர்பார்க்கப்படும்  ஆக்‌ஷன்- ட்ராமா திரைப்படம். இதில் சைஃப் அலிகான், ஜூனியர் என்டிஆர் உடன்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அற்புதமான கதைக்களம் மற்றும் திறமையான நடிகர்களுடன் இந்தப் படம் மிகப்பிரமாண்டமாக உருவாகி வருகிறது. கடந்த மாதம் ஹைதராபாத்தில் இந்த படத்தின் பூஜை நடந்தது. இதில் RRR பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரஷாந்த் நீல் ஆகியோர் கலந்து கொண்டு, இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்கி வைத்தனர்.  பூஜைக்குப் பிறகு ’NTR 30’ படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியது. மேலும் இந்த படத்தின் மூலம் நடிகை ஜான்வி கபூர் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

மாடல்களை வைத்து விபச்சாரம்... 27 வயது மாதவன் பட நடிகை அதிரடி கைது! திரையுலகில் பரபரப்பு..

 சைஃப் அலிகான் ’என்டிஆர் 30’ படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த தகவலை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படத்தை யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கிறது மற்றும் நந்தமுரி கல்யாண் ராம் படத்தை வழங்குகிறார். மேலும், ஏப்ரல் 5, 2024 அன்று படம் பான் இந்திய அளவில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளத. இந்த படத்தின் மூலம் முதல் முறையாக தெலுங்கு படத்திற்கு இசையமைக்க உள்ளார், அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!