
தமிழ் திரையுலகில், குணச்சித்திர வேடத்தில் அறிமுகமாகி பின்னர் ஹீரோ வாய்ப்பை எட்டிப்பிடித்தவர் அசோக் செல்வன். இவர் ஹீரோவாக நடித்த தெகிடி, இவருக்கு வெற்றிப்படமாக அமைந்த போதிலும் அடுத்தடுத்து வெளியான படங்கள், தோல்விப்படங்களாகவே அமைந்தது. ஆனால் விடாமுயற்சியுடன் சிறந்த படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே, போர்தொழில் போன்ற படங்கள் அசோக் செல்வனுக்கு வெற்றியை தேடி கொடுத்தது.
தற்போது கை நிறைய படங்களுடன் படு பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிக்கும் அசோக் செல்வன். பா.ரஞ்சித் தயாரிப்பில் தற்போது நடித்து வரும் 'ப்ளூ ஸ்டார்' படத்தில் நடித்த போது, அந்த படத்தின் நாயகி கீர்த்தி பாண்டியனை காதலிக்க துவங்கினார். இவர்கள் காதலுக்கு இரு வீட்டு தரப்பிலும் பச்சை கொடி காட்டிய நிலையில், இந்த படம் வெளியாவதற்கு முன்பே, திருமணத்தையே நடத்தி முடித்துவிட்டனர். மேலும் இவர்களின் திருமண பரிசாக, 'ப்ளூ ஸ்டார்' படத்தில் இருந்து அழகிய காதல் பாடல் ஒன்றும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இவர்களின் திருமணம், நடிகரும் - தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் உள்ள இட்டேரி என்கிற கிராமத்தில் அமைந்துள்ள, பண்ணைவீட்டில் பிரமாண்டமாக நடந்தது. தமிழ் முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு பசுமை விருந்து பரிமாறப்பட்டது.
திருமணத்திற்கு பின்னர், சென்னையில் இவர்களுடைய திருமண ரிசப்ஷன் நடந்தது. அதில் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் சூர்யா, கார்த்திக், வாணி போஜன், உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் உட்பட அனைவருமே கலந்து கொண்டனர். திருமண பார்ட்டியின் போது கீர்த்தி மற்றும் அசோக் செல்வன் இருவருமே 80'ஸ் கெட்டப்பில் இருந்தனர். இந்த பார்ட்டியில் செம்ம வைப்புடன் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இருவரும், தில்லானா... தில்லானா... பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.