விஜய் ஆண்டனி மகள் மரணமே கடைசி! பிரபலங்கள் துக்க நிகழ்வுகளில் வீடியோவுக்கு அனுமதி மறுப்பு! தயாரிப்பாளர் சங்கம்!

Published : Sep 21, 2023, 04:15 PM IST
விஜய் ஆண்டனி மகள் மரணமே கடைசி! பிரபலங்கள் துக்க நிகழ்வுகளில் வீடியோவுக்கு அனுமதி மறுப்பு! தயாரிப்பாளர் சங்கம்!

சுருக்கம்

விஜய் ஆண்டனி மகளின் இறுதிச்சடங்கில் மீடியாக்கள் வீடியோ எடுக்கிற பெயரில், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் நடந்து கொண்டதாக, சர்ச்சை எழுந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  

இந்த அறிக்கையில், பிரபலங்கள்/ சினிமா துறையினரின் துக்க நிகழ்வுகளில் இனி வீடியோ அனுமதி மறுப்பு அல்லது காவல்துறை அனுமதி பெற்ற பிறகே வீடியோ எடுக்க அனுமதிக்கும்படி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, "மரணம் கொடுமையானது. அதிலும் அகால மரணங்கள் மிகக்    கொடுமையானது. அப்படியொரு நிகழ்வை சந்திக்கும்போது சொந்த பந்தங்கள்.. உடன் நட்புகள் கலங்கிப்போகும். செய்வதறியாது திகைத்துப் போகும். 

அந்நேரம் ஆறுதல் சொல்லுதலே இயலாத காரியம். தேற்றுவதற்கு வார்த்தைகள் இருக்காது. உடன் நிற்பது மட்டுமே சாத்தியமாகும். அந்நேரத்தைக் கூட நம்மால் தர முடியாத நிலைக்குத் தள்ளிவிடுகின்றன சமீபகால மீடியாக்களின் செயல். புகழ்பெற்றவர்களின் வீட்டு இழப்பை இவர்கள் படம் எடுத்துப் போடுவதால் தேவையற்ற கூட்டம் சேர்கிறது.

மனசாட்சியே இல்லையா? விஜய் ஆண்டனி மகள் இறுதிச்சடங்கில் ஊடகங்கள் நடந்து கொண்ட விதம்! எகிறும் கண்டனங்கள்!

வந்து உடன் நிற்க நினைக்கும் பலரை துக்க வீட்டிற்கே வரவிடாமல் செய்துவிடுகிறது. அல்லது வந்ததும் ஓட வைத்துவிடுகிறது.  முன்பெல்லாம் ஊடக தர்மம் இருந்தது. எந்நிகழ்வை படமாக்க வேண்டும். கூடாதென்று. 

இப்போது சமூக வலைதளங்கள் பெருகிய பின் எல்லாமே மாறிவிட்டது. அறநிலை பிறழ்ந்துவிட்டது ஊடகங்கள். மரண வீட்டின் உள்ளே வரை நுழைந்து காட்சித் திருடுவதை செய்கின்றன. நம் அனுமதி இல்லாமல் இரக்கமற்று நம் கையறு நிலையில் நிற்கும் முகங்களை படம் பிடித்துக் காட்டுகின்றனர். இது எந்தவிதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை. சினிமாக்காரர்களின் வீடு என்ன திறந்த மடமா?? அவர்களின் துக்கம் கேலிச் சித்திரமா? நேற்றும்..இதற்கு முன் நிகழ்ந்த மரண நிகழ்விலும் மீடியாக்கள் நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. மீடியாக்கள் போர்வையில் வருபவர்களையும்  அடையாளங்கண்டு களைய வேண்டிய நேரம் இது. 

Arun Vijay: படிக்கும் போது அம்மா சொன்ன அந்த வார்த்தை! காதல் என்றாலே பயந்து நடுங்கிய நடிகர் அருண் விஜய் ஓப்பன்

குடும்ப உறவுகளாக மதிக்கும் மீடியாவினரின் இதுபோன்ற நாகரீகமற்ற செயல்கள் வேறுபடுத்திப் பார்க்க வைக்கின்றன.  இவர்களுக்கும் நம் இழப்பிற்கும் சம்பந்தமே இல்லையோ என எண்ண வைக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் மனச் சங்கடத்தை உருவாக்கியுள்ளது. ஊடக தர்மத்தை மீறி நடந்துகொள்வதால்... காணொளி செய்பவர்களை மரண வீட்டில்  மறுக்க வேண்டிய விதிமுறைகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

காதலியை கரம்பிடிக்கப்போகும் 'வானத்தை போல' சீரியல் ஹீரோ ராஜ பாண்டி! நடந்து முடிந்தது நிச்சயதார்த்தம்! போட்டோஸ்

அதற்கான செயல்பாடுகளைத் தீவிரப்படுத்துவது தயாரிப்பாளர்கள்... மற்றும் சினிமா சார்ந்த அனைவரின் முக்கிய கடமையாகும். அப்போதுதான் நம் வீட்டு நிகழ்வுகளில் அநாகரீகங்கள் தடுக்கப்படும்.  ஒரு மூத்த கலைஞனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையிலும் ஊடகத்தினரின் செயல்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். காவல்துறையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் மீடியாக்களை அனுமதிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன். என தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!
கதறி அழும் விசாலாட்சி; ஆறுதல் சொல்லும் மருமகள்; குணசேகரின் கேம் இஸ் ஓவர் என்று பேசும் ஜனனி: எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்!