ஆர்யா எங்கம்மா? கவர்ச்சி உடையில் டான்ஸ் ஆடி ஊரடங்கை கதறவிட்ட சயீஷா! வைரலாகும் வீடியோ...

By manimegalai aFirst Published Apr 17, 2020, 1:49 PM IST
Highlights

உலக நாடுகளை கடந்து தற்போது இந்திய மக்களையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பீதியின் காரணமாகவும், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்திலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
 

உலக நாடுகளை கடந்து தற்போது இந்திய மக்களையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பீதியின் காரணமாகவும், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்திலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது ஊரடங்கு உத்தரவு மேலும் சில தினங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதனால் எப்போது ஷூட்டிங், டப்பிங், பட விழாக்கள் என பிஸியாக இருந்த பிரபலங்கள் அனைவரும் வீட்டின் உள்ளேயே முடங்கியுள்ளனர். தற்போது கிடைத்திருக்கும் இந்த ஓய்வு நாட்களை குடும்பத்துடன் செலவிட்டு வரும் அவர்கள், அடிக்கடி தங்களுக்கு பிடித்த சமையல் செய்து அசத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகர் ஆர்யாவின் காதல் மனைவி, தன்னுடைய கணவருக்கு விதவிதமான கேக் போன்ற சில உணவு பொருட்களை செய்து கொடுத்து அசத்தி வந்த நிலையில், தற்போது கவர்ச்சி உடையில் டான்ஸ் ஆடி ரசிகர்கள் அனைவருக்குமே கண்களுக்கு விருந்து கொடுத்துள்ளார்.

திருமணத்திற்கு முன், அடிக்கடி டான்ஸ் ஆடி வீடியோ வெளியிடும் சாயிஷா சமீப காலமாக அது போன்ற வீடியோக்களை வெளியிடுவது இல்லை. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின், ஆர்யா இல்லாமல் அவர் மட்டும், பிரபல பாடகி, மற்றும் டான்சர் ஜெனிபர் லோபஸ் பாடலுக்கு டான்ஸ் ஆடி அவரை போலவே ஸ்டெப்ஸ் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் ஒருமுறையாவது ஜெனிபர் லோபஸ்  இசை நிகழ்ச்சியை நேரில்  பார்க்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் ஆசை. இருப்பினும் இந்த நேரத்தில் அவருடைய பாடலுக்கு நடனம் ஆடியது  மகிழ்ச்சி’ என்று கூறியுள்ளார்.

தற்போது சயீஷா கஜினிகாந்த், காப்பான் படத்திற்கு பின் மூன்றாவது முறையாக கணவர் ஆர்யாவுடன் இணைத்து ‘டெடி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.  கன்னட படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா பிரச்சனையின் காரணமாக தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

click me!