24 வருஷத்துக்கு முன் மகள் பிறந்தநாளுக்கு வாங்கிய பொருளை பேத்தியின் பர்த்டேக்கு கிப்டாக தந்த சாயிஷாவின் அம்மா

By Ganesh A  |  First Published Jul 25, 2023, 4:08 PM IST

நடிகர் ஆர்யா - நடிகை சாயிஷா ஜோடியின் மகளான ஆர்யானாவின் இரண்டாவது பிறந்தநாளை குடும்பத்தினரோடு சிம்பிளாக கொண்டாடி உள்ளனர்.


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காதர்பாட்ஷா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் சார்பட்டா 2, பாஸ் என்கிற பாஸ்கரன் 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் ஆர்யா. இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆர்யாவும், சாயிஷாவும் கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது காதலித்தனர். இதையடுத்து காப்பான், டெடி போன்ற படங்களில் சேர்ந்து நடித்த இவர்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆர்யானா என பெயரிட்டுள்ளனர். ஆர்யா - சாயிஷா ஜோடியின் மகளின் இரண்டாவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படியுங்கள்... எளிமைக்கு பெயர்போன அரசியல்வாதியின் கதை... முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட கக்கன் பட டிரைலர் இதோ

இதற்காக வீட்டிலேயே சிம்பிளாக அலங்காரம் செய்து குடும்பத்தினருடன் தனது மகளின் இரண்டாவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார் ஆர்யா. மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை வீடியோ பதிவு செய்து அதனை தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார் நடிகை சாயிஷா. அந்த வீடியோ 3 லட்சத்துக்கும் மேல் பார்வைகளைப் பெற்று டிரெண்டாகி வருகிறது.

மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவில் ஒரு சுவாரஸ்ய தகவலையும் பகிர்ந்துள்ளார் சாயிஷா. அது என்னவென்றால், தான் 2 வயதில் பிறந்தநாள் கொண்டாடியபோது பயன்படுத்திய 2 என்கிற எண்ணுடன் கூடிய மெழுகு வர்த்தியை தனது தாய் 24 ஆண்டுகளாக பாதுகாத்து வைத்திருந்து அதை தற்போது தனது மகள் ஆர்யானாவின் பிறந்தநாளுக்கு பரிசாக கொடுத்தாராம். அந்த மெழுகுவர்த்தியை ஏற்றி தான் பிறந்தநாள் கேக்கை வெட்டியுள்ளனர். இதைப்பார்த்த ரசிகர்கள், இப்படி ஒரு கிப்ட் யாருக்கும் கிடைச்சிருக்காது என பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... 84 வயதில் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தில் ஹீரோவாக நடிக்கும் காமெடி கிங் கவுண்டமணி!

click me!