நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷாவின் மகளான ஆரியானாவின் கியூட் வீடியோ ஒன்றை சாயிஷா வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஆர்யா. இந்நிலையில் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு, இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் 'கஜினிகாந்த்' படத்தில் நடித்த போது, அந்த படத்தில் நாயகியாக நடித்த சாயிஷாவுக்கும், ஆர்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவருமே பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
திரையுலகில் 30 வருடத்தை நிறைவு செய்த தளபதி..! உதவி செய்து கொண்டாடிய விஜய் ரசிகர்கள்..!
கடந்த 2019 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக இவர்களுடைய திருமணம் நடந்த நிலையில், இதில் பல பாலிவுட் மற்றும் கோலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திருமணத்திற்கு பின்னர் சாயிஷா கமிட் ஆன படங்களை மட்டுமே நடித்து முடித்த நிலையில், பின்னர் ஒரேயடியாக... திரையுகத்தில் இருந்து விலகினார். மேலும் சாயிஷா கர்ப்பமாக இருந்த தகவலை ரகசியமாகவே ஆர்யா வைத்திருந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதி இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்த தகவலை விஷால் தன்னுடைய சமூக வலைதள பக்கம் மூலம் வெளியிட்டார்.
அதிர்ச்சி.. வெற்றிமாறனின் 'விடுதலை' படப்பிடிப்பில் விபத்து..! ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி..!
இதை தொடர்ந்து, ஒரு முறை கூட குழந்தையின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டம் இருந்து வந்த ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதி, முதல் முறையாக வீடியோ மூலம் குழந்தையை காட்டியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் ஆர்யா - சாயிஷா ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில் அவர் தனது தாயார் மற்றும் மகளுடன் பண்ணை வீட்டில் இருக்கும் காட்சிகளை சாயிஷா பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் சாயிஷாவின் மகள் ஆரியானா இருப்பது தான் ஹை லைட் என்றும், முகத்தை முழுவதுமாக காட்டவில்லை என்றாலும், அவர் செம்ம கியூட்டாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.