திருமண கோலத்தில் நடிகை ஹன்சிகா..! கனவுக்குள் நுழைகிறேன் சோஹைல் கதுரியா வெளியிட்ட வீடியோ!

By manimegalai a  |  First Published Dec 3, 2022, 1:46 PM IST

திருமண கோலத்தில் நடிகை ஹன்சிகா இருக்கும் வீடியோவை அவருடைய வருங்கால கணவர் சோஹைல் கதுரியா வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 


தமிழ் சினிமாவில், விஜய், தனுஷ், ஜெயம் ரவி, போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள பிரபல நடிகை திருமண பந்தத்தில் இணைய உள்ளார். இவரின் திருமணம் டிசம்பர் 4 ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ளது.  ஹன்சிகா தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னரும், மற்றும் தோழியின் முன்னாள் கணவருமான சோஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 வருடம் பழமை வாய்ந்த முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் மிகப் பிரமாண்டமாக நடக்க உள்ளது. இதைத்தொடர்ந்து இவருடைய திருமண சடங்குகள் தற்போது துவங்கி உள்ள நிலையில், ஹன்சிகா மணமகள் கோலத்தில் அழகு தேவதை போல் மின்னும் வீடியோ ஒன்றை சோஹைல் கதுரியா வெளியிட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

ஷிவினை தாக்கிய தனலட்சுமி..! பிக்பாஸ் வீட்டிற்குள் அடிதடியில் இறங்கிய போட்டியாளர்கள்.. வைரலாகும் வீடியோ..!

ஏற்கனவே கடந்த மாதம் 22 ஆம் தேதி, ஹன்சிகா மற்றும் சோஹைல் கதுரியா இருவருக்கும் மாதா கி சோகி என்கிற சடங்கு நடந்த போது, ஹன்சிகா மற்றும் மணமகன் சோஹைல் கதுரியா  இருவரும் சிகப்பு நிற உடையில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இதைத்தொடர்ந்து இவர்களுடைய திருமண கொண்டாட்டம் சூஃபி இசை கச்சேரியுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றை  சோஹைல் கதுரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது. இதில் ஹன்சிகா மணமகள் உடையில் அழகு தேவதை போல்  சோஹைல் கதுரியாவுடன் நடந்து வருகிறார்.

வெண்ணிலா கபடி குழு பட நடிகர் ஹரிவைரவன் உடல்நல குறைவால் மரணம்..!

மேலும் இன்று ஹன்சிகாவின் மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சி நடக்க உள்ளதாகவும், இதை தொடர்ந்து நாளை இவர்களுடைய திருமணம் நடக்கிறது. இவர்களுடைய திருமண ஒளிபரப்பு உரிமையை hotstar நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், இவர்களின் திருமண கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் முதல் குடும்பத்தினர் வரை அனைவருக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

click me!