பிக்பாஸ் வீட்டில் எதோ ஒரு பொருளுக்காக ஷிவின் மற்றும் தனலட்சுமி ஆகியோர் அடிதடி வரை இறங்கியுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி, அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாக 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில்... இந்த வாரம், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளில் இருந்தே... சேப் கேம் விளையாடி வரும், குயின்சி தான் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தான் மற்ற போட்டியாளர்களை விட மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாகவும் கூறுகிறார்கள். அதே போல் மற்றொரு போட்டியாளரான மைனா இந்த வார ஏவிக்ஷனில் இருந்து நூல் இழையில் தப்பியுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக போட்டியாளர்கள் தொடர்ந்து சர்ச்சையான காரியங்களை கூட, அசால்டாக செய்து வருகிறார்கள். அந்த வகையில், அசீம் சக போட்டியாளரை அடிக்க கையை ஓங்கியதும், கன்னத்தில் அடித்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனலட்சுமி தற்போது ஷிவினை தாக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்த வீடியோக்களும் வைரலாகி, பலர் தனலட்சுமியை விமர்சனம் செய்ய துவங்கியுள்ளனர்.
வெண்ணிலா கபடி குழு பட நடிகர் ஹரிவைரவன் உடல்நல குறைவால் மரணம்..!
இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தய சீசன்களில்... போட்டியாளர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தாலும், ஒருவரை ஒருவர்... விளையாட்டிற்கு கூட தாக்கியது இல்லை. ஆனால் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த அதிச்சிகரமான சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், தற்போது ஷிவின் கையில் உள்ள ஒரு பொருளை கைப்பற்றுவதற்காக தனலக்ஷ்மி அவருடன் காரஞ்சாரமாக மோதியுள்ளர். இதனை சக போட்டியாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
மேலும் ஷிவினை, தனலட்சுமி அடிக்கும் காட்சிகளும் உள்ளது. இது உண்மையில் போடப்பட்ட சண்டையா? அல்லது டாஸ்க்கிற்காக மோதி கொண்டார்களா என்பது தெரியவில்லை. தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
please throw this shit away from the house 😡🤬 How can she slap someone like this😡😡😡 pic.twitter.com/aUpHi7BmDv
— Raghav (@Raghav9099)