வெண்ணிலா கபடி குழு பட நடிகர் ஹரிவைரவன் உடல்நல குறைவால் மரணம்..!

Published : Dec 03, 2022, 10:50 AM IST
வெண்ணிலா கபடி குழு பட நடிகர் ஹரிவைரவன் உடல்நல குறைவால் மரணம்..!

சுருக்கம்

வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நான் மஹான் அல்ல... போன்ற படங்கள் நடித்த ஹரி வைரவன் இன்று காலை உடல்நல குறைவால் காலமானார்.  

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'வெண்ணிலா கபடி குழு', 'குள்ளநரி கூட்டம்',  கார்த்தி நடித்த 'நான் மகான் அல்ல' போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஹரி வைரவன். இந்த மூன்று படங்களைத் தவிர, மற்ற படங்களில் நடித்திராத இவரை பற்றி இவருடைய மனைவி கவிதா சமீபத்தில் கொடுத்த பேட்டிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

ஏற்கனவே சர்க்கரை நோயால் கடந்த பத்து வட்டத்திற்கும் மேலாக ஹரி வைரவன் அவதிப்பட்டு வந்த நிலையில், திடீரென கை கால்கள் வீங்க தொடங்கியதாகவும், இதை அடுத்து மருத்துவரிடம் பரிசோதனை செய்தபோது... உடல் நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை என முதலில் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வகுடெடுத்து வழித்து சீவி... வித்தியாசமான தோற்றத்தில் போட்டோ ஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்! வைரலாகும் போட்டோஸ்!

பின்னர் வைரவன் தூங்கும் போதே ஒரு நாள் முழுக்க கோமாவில் சென்றுள்ளார். உறவினர்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருடைய சிகிச்சைக்கு, பிரபல காமெடி நடிகர் பிளாக் பாண்டி, சூரி, கார்த்தி போன்றோர் உதவி செய்துள்ளனர். இதற்குப் பின்னர் ஹரி வைரவனின் இரண்டு கிட்னியும் செயல் இழந்து விட்டதாகவும் ஆறு மாதம் மட்டுமே உயிரோடு இருப்பார்கள் என மருத்துவர்கள் இவருக்கு கெடு வைத்த நிலையில், அவருடைய மனைவி கவிதா... தன்னுடைய கணவர் உயிருடன் இருந்தால் மட்டும் போதும், எனவே அவரின் சிகிச்சைக்கு மட்டும் உதவும்படி கோரிக்கை வைத்தார்.

பாரதிக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த அதிர்ச்சி? DNA ரிசல்ட்டை தொடர்ந்து தெரியவரும் இரண்டு உண்மைகள்!

மேலும் தன்னுடைய கணவரின் சிகிச்சைக்காக, தன்னுடைய தாலி முதல்கொண்டு அனைத்தையும் விற்று விட்டதாக தெரிவிதத்து பார்ப்பவர்கள் நெஞ்சங்களையே கலங்க செய்தது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஹரி வைரவன், இன்று அதி காலை 12:15 மணிக்கு உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரின் இறுதி சடங்குகள் இன்று மாலை 4 மணியளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு கவிதா எங்கிற மனைவியும், மகள் ஒருவரும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன சார் இதெல்லாம்? ஜெயிலர் படப்பிடிப்பை விட்டுட்டு எங்க போய் இருக்காரு பாருங்க நெல்சன் திலீப் குமார்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!
இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்