தளபதி விஜய் தற்போது நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இந்த பாடத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்த ரிலீஸ் தற்போது வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில், 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், சங்கீதா, ஷாம், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தை மிகப் பிரமாண்டமாக, பிரபல தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு... ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் அவ்வப்போது 'வாரிசு' படத்தின் அப்டேட் குறித்த தகவலை வெளியிட்டு வரும் பட குழுவினர், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' படத்தில் இருந்து செகண்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதியை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
விஜய்யின் 30 வருட திரையுலக வாழ்க்கையை சிறப்பிக்கும் விதமாக இந்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'தீ தளபதி' என்கிற இரண்டாவது சிங்கிள் பாடல் டிசம்பர் 4 ஆம் தேதி, சரியாக 4 மணிக்கு வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த பாடல் அறிவிப்பு குறித்த போஸ்டரில், செஸ் காயினில் உள்ள ராஜாவின் உருவ பிரதிபலிப்பும், அதை சுற்றி அக்னி ஜுவாலைகள் கொழுந்து விட்டு எறிவது போல் உள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் அடுத்த சிங்கிள் பாடலில் தளபதி தீயாக வரப்போகிறார் என கொண்டாடி வருகின்றனர்.
பாரதிக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த அதிர்ச்சி? DNA ரிசல்ட்டை தொடர்ந்து தெரியவரும் இரண்டு உண்மைகள்!
ஏற்கனவே வெளியான முதல் சிங்கிள் பாடலான 'ரஞ்சிதமே' பாடல்... பல சர்ச்சைகளில் சிக்கினாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று youtube பக்கத்தில் 75 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்திருக்கும் நிலையில், தற்போது விஜய்யின் அடுத்த பாடலை தமன் இசையில் கொண்டாட காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.