
பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் டிஎஸ்பி. சேதுபதி படத்துக்கு பின் விஜய் சேதுபதி போலீசாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை அனுகீர்த்திவாஸ் நடித்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி புகழ், சாந்தினி, பிக்பாஸ் பிரபலம் ஷிவானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகர் விமலும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்.
டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி வாஸ்கோடகாமா என்கிற போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது. இப்படம் பார்த்த நெட்டிசன்கள் டுவிட்டரில் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... கலக்கலா?... சொதப்பலா? விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ எப்படி இருக்கிறது? - விமர்சனம் இதோ
அதன்படி படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள டுவிட்டில், “கொஞ்டம் காமெடியுடன் பார்த்து சலித்துப் போன போலீஸ் கதை தன் டிஎஸ்பி. வழக்கமாக நல்ல போலீசாக வருகிறார் விஜய் சேதுபதி ஆனால் சேதுபதியில் செட் ஆனதுபோல் இதில் அவருக்கு அந்த போலீஸ் கெட் அப் செட் ஆகவில்லை. இசை நன்றாக உள்ளது. ஆனால் சில பிஜிஎம் எங்கேயோ கேட்டது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. புகழின் காமெடி 25 சதவீதம் தான் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. பொன்ராம் சொதப்பிவிட்டார்” என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள டுவிட்டில், “டிஎஸ்பி, மாஸ் ஆன முதல் பாதியும், பழைய பார்முலாவில் இரண்டாம் பாதியும் அமைந்துள்ளது. விஜய் சேதுபதி வழக்கமான தனது ஆற்றல்மிக்க நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். நாயகி அனுகீர்த்தியும் பளிச்சிடுகிறார். இயக்குனர் ஹரி போல் விறுவிறுப்பான போலீஸ் படத்தை எடுக்க நினைத்து தோற்று இருக்கிறார் பொன்ராம்” என குறிப்பிட்டுள்ளார்.
டிஸ்பி படம் குறித்து நெட்டிசன் போட்டுள்ள விமர்சனத்தில், “டிஎஸ்பி, முதல் பாதியே முடியல... பொன்ராம் என்னய பண்ணி வச்சிருக்க. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பதை விட வில்லனாக நடிப்பதே நல்லது. முடிஞ்சா டிக்கெட் காச திருப்பி அனுப்பி விடுங்க” என ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு டுவிட்டர் பதிவில், “டிஎஸ்பி படத்தில் விஜய் சேதுபதி நன்றாக நடித்துள்ளார். இசை நேர்த்தியாக உள்ளது. ஒளிப்பதிவு சூப்பர். சில இடங்களில் ஆங்காங்கே காமெடி ஒர்க் அவுட் ஆகி உள்ளது. திரைக்கதை தான் படத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இன்னும் நல்லா எடுத்திருக்கலாம். ஏமாற்றமடைந்தேன்” என பதிவிட்டுள்ளார்.
மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும் போது படம் மிகவும் சுமாரான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... ஹன்சிகாவின் திருமணம் நடக்க உள்ள 450 ஆண்டு பழமைவாய்ந்த முண்டோடா அரண்மனையின் ஸ்பெஷல் என்ன? அதன் வாடகை இவ்வளவா?