செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கட்டா குஸ்தி திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எஃப்.ஐ.ஆர் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் . செல்லா அய்யாவு இயக்கியுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் முனீஸ்காந்த், கருணாஸ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.
விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று கட்டா குஸ்தி என்கிற பெயரில் தமிழிலும், மட்டி குஸ்தி என்கிற பெயரில் தெலுங்கிலும் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்நிலையில், இப்படம் குறித்த டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... பல கெட்டப்பில் காமெடியில் தெறிக்கவிடும் வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'..! ட்ரைலர் வெளியானது..!
அதன்படி படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : “கட்டா குஸ்தியில் விஷ்ணு விஷால் நன்றாக நடித்து இருக்கிறார். காமெடியும் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. கருணாஸை இந்த மாதிரியான ரசிக்கும்படியான கதாபாத்திரத்தில் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. படத்தின் ஹைலட் ஐஸ்வர்யா லட்சுமி தான். பொன்னியின் செல்வனுக்கு பின் இவருக்கு அதிக ஸ்கோப் உள்ள படமாக இது அமைந்துள்ளது. அவர் அவரது கதாபாத்திரத்தை அழகாகவும், தனித்துவமாகவும் கையாண்டுள்ள விதம் அருமை” என குறிப்பிட்டுள்ளார்.
Decent entertainer. Vishnu Vishal good. Comedy worked well. Karunas performed well after longtime.
Highlight: after Ps-1 biggest scope to score in Gatta kusthi,she carried her character very beautifully and uniquely.
கட்டா குஸ்தி படம் பார்த்த ஆடை, மேயாத மான் போன்ற படங்களின் இயக்குனர் ரத்னகுமார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “கட்டா குஸ்தியில் விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு காமெடி செய்து மரண மாஸ் காட்டியுள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி. அவரது கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும். அனைத்து செண்டர் ஆடியன்ஸுக்கும் இப்படம் பிடிக்கும். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்த விஷ்ணு விஷாலுக்கு பாராட்டுக்கள். இயக்குனர் செல்லா அய்யாவு மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
is Hilarious. 🎉🥳. Aishwarya Lekshmi's ROFL max Marana mass Transformation going to be the talk of the town 🤣💥🔥. All center will go Gaga for this. Respect bro for accepting this role👏👌.
Congrats Director & team. pic.twitter.com/VUAgRjUjXH
படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள டுவிட்டில், “என்ஜாய் பண்ணி பார்க்கக்கூடிய கமர்ஷியல் படமாக கட்டா குஸ்தி உள்ளது. நல்ல காமெடி மற்றும் விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி இடையேயான ரொமான்ஸ் ரசிக்கும்படியாக உள்ளது. குறிப்பாக இண்டர்வெல் சீன் மாஸாகவும், நகைச்சுவை மிகுந்ததாகவும் இருந்தது. கருணாஸ் - முனீஸ்காந்த் காம்போவின் காமெடி ஒர்க் அவுட் ஆகி உள்ளது” என பதிவிட்டுள்ளார்.
- An enjoyable commercial film with good dosage of comedy and romance between the lead pair and (the interval sequence is massy and laugh riot). Karunas and Munishkanth combo also clicks. Rating : 3.25 out of 5
— Cinematics (@cinematics_off)மற்றொரு நெட்டிசன் பதிவிட்டுள்ளதாவது “கட்டா குஸ்தி விறுவிறுப்பாகவும், ரசிக்கும்படியாகவும் உள்ளது. விஷ்ணு விஷாலும், ஐஸ்வர்யா லட்சுமியும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர். செல்லா அய்யாவுவின் எழுத்து அருமை. ஒளிப்பதிவும், பின்னணி இசையும் ரசிக்கும்படி உள்ளது. குடும்பத்தோடு ரசிக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
Review:
Engaging & Entertains 👏 & make the film more effective & good 👌
Writing Works 💯
Cinematography & BGM 😁
A good watch for family audiences this week 😀
Rating: ⭐⭐⭐💫/5 pic.twitter.com/S1DUCpPFjC
கட்டா குஸ்தி படம் குறித்து நெட்டிசன் பதிவிட்டுள்ள விமர்சனத்தில், “கட்டா குஸ்தி சர்ப்ரைஸ் பேக்கேஜ். குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் இருக்கிறது. விஷ்ணு விஷால், கருணாஸ், காளி வெங்கட் வரும் காட்சிகள் காமெடிக்கு கேரண்டி. இருந்தாலும் ஐஸ்வர்யா லட்சுமி வேற லெவல். நிறைய காமெடி காட்சிகளுடன் கூடிய சிறந்த குடும்ப படமாக கட்டா குஸ்தி உள்ளது” என பதிவிட்டுள்ளார்.
surprise package 👍🏼
fun-filled comedy family entertainer...
Vishnu Vishal, Karunas, Kaali venkat performance are gud & scenes are hilarious... But Aishwarya Lakshmi steal the show
Good family entertainer with lot of laughing moments 👍🏼 pic.twitter.com/0gU5agyCnF
மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும் போது விஷ்ணு விஷால் கட்டா குஸ்தியில் வெற்றி வாகை சூடிவிட்டார் போல தான் தெரிகிறது.
இதையும் படியுங்கள்... லைகர் பட பஞ்சாயத்து... 12 நேரம் துருவி துருவி விசாரணை நடத்திய அமலாக்கத்துறை... நொந்துபோன விஜய் தேவரகொண்டா