மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம், ரியா சுமன், முனீஷ்காந்த், புகழ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தின் டுவிட்டர் விமர்சனம்.
சந்தானம் நடிப்பில் தற்போது ரிலீசாகி உள்ள படம் ஏஜெண்ட் கண்ணாயிரம். மனோஜ் பீதா இப்படத்தை இயக்கி இருக்கிறார். இது தெலுங்கில் நவீன் போலிஷெட்டி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசாகி வெற்றிபெற்ற ஏஜெண்ட் ஸ்ரீவத்சவா படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தில் நடிகர் சந்தானம் ட்டெக்டிவ் ஏஜெண்டாக நடித்துள்ளார்.
இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளா. மேலும் முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, புகழ், சுருதி ஹரிஹரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இன்று திரையரங்குகளில் ரிலீசாகி உள்ள ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... குட்டியா இருந்தாலும் கியூட்டா இருக்கே... குழந்தைக்கு பெயர்சூட்டிய ஆலியா பட் - அந்த பெயருக்கு இவ்ளோ அர்த்தமா?
அதன்படி படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : “ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தில் இயக்குனர் மனோஜ் காமெடி மற்றும் திரில்லரை சமமாக கொடுத்து உள்ளதாகவும், சந்தானத்தின் நடிப்பு மற்றும் காமெடி நன்கு ஒர்க் அவுட் ஆகி உள்ளது. முனீஷ்காந்த் மற்றும் புகழின் டைமிங் காமெடிகள் கவனம் ஈர்க்கின்றன. யுவனின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்” என குறிப்பிட்டுள்ளார்.
: Comedy and Thriller equally Balanced by Director Acting & comedies Worked very well ! & Timing notable.
Music big plus 🎶🔥
Worth watch 👍🏻😊
pic.twitter.com/u2zKIi1n2v
மற்றொரு பதிவில், ஏஜெண்ட் கண்ணாயிரம் படம் தரமாக இருப்பதாக பதிவிட்டுள்ள நெட்டிசன் ஒருவர். இதில் புது சந்தானத்தை பார்த்த அனுபவம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, சந்தானம் நடிப்பு மற்றும் நடிப்போடு காமெடியிலும் அசத்தியிருப்பதாகவும், யுவனின் இசை அருமை என தெரிவித்துள்ளதோடு, படம் நிச்சியம் வெற்றி பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
: இடைவேளை 🙌 படம் தரம் !! புது சந்தானத்தை பார்த்த அனுபவம்.. நடிப்பு மற்றும் நடிப்போடு காமெடியும் அசத்தியிருக்கிறார். இசை 👏 நிச்சியம் படம் வெற்றி பெறும் 👍🏻👍👍 pic.twitter.com/1eIHNNHKp9
— RajaSekar (@iamrajasekar_)மற்றொரு டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது : “ஏஜெண்ட் கண்ணாயிரம் படம் இப்போதான் பார்த்தேன், வித்தியாசமா இருக்கு. இதுக்கு முன்பு சந்தானத்தை இந்த மாதிரி கதாபாத்திரத்தில் பார்த்ததில்லை. யுவனின் இசை பக்க பலம். சரியான படம் போய் பாருங்க” என குறிப்பிட்டுள்ளார்.
. இப்போதான் படம் பார்த்தேன் வித்தியாசமா இருக்கு. இதுக்கு முன்பு சந்தானத்தை இந்த மாதிரி கதாபாத்திரத்தில் பார்த்ததில்லை. இசை பக்க பலம் 👍🏻
இந்த Weekend'க்கு சரியான படம் போய் பாருங்க 🏇🏻🏇🏻 pic.twitter.com/W6Mw7ItYUx
நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள டுவிட்டில், “ஏஜெண்ட் கண்ணாயிரம் என்ன ஒரு அருமையான திரில்லர் படம். சந்தானத்தின் காமெடி, செண்டிமெண்ட் அனைத்தும் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. படத்தின் மேக்கிங் அருமை குறிப்பாக ஒளிப்பதிவு பிரமாதம். சரியான டிடெக்டிவ் திரில்லர் படம்” என பதிவிட்டுள்ளார்.
What an Thriller Saar Comedy timing ,Sentiment everything is Worked very well 😍👏
Making of movie is very Quality Especially Cinematography Excellent 👏
A perfect Deductive Thriller Watch it guys 👍🏻 pic.twitter.com/UerfICy57n
மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும் போது இப்படத்திற்கு அதிகளவு பாசிடிவ் விமர்சனங்கள் தான் கிடைத்து உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தோல்விப் படங்களாக கொடுத்துவந்த சந்தானத்திற்கு ஏஜெண்ட் கண்ணாயிரம் ஒரு கம்பேக் படமாக இருக்கும் போல் தெரிகிறது.
இதையும் படியுங்கள்... ‘ரஜினிமுருகன் 2’ கதை ரெடி.. சிவகார்த்திகேயனுக்கு டபுள் ஆக்ஷன் - இயக்குனர் பொன்ராம் வெளியிட்ட வேறலெவல் அப்டேட்