
சினிமா ரசிகர்கள் குறிப்பாக ஹாரர் பட ரசிகர்களிடையே 'டிமாண்டி காலனி' திரைப்படம் அதன் புதுமையான கதை சொல்லலுக்கும் உறைய வைக்கும் காட்சிகளுக்காகவும் புது பிராண்டாக உருவானது. நடிகர் அருள்நிதி மற்றும் இயக்குநர் அஜய் ஞானமுத்து கூட்டணி தற்போது 'டிமாண்டி காலணி2' படத்துக்காக மீண்டும் இணைந்திருக்கிறார்கள் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிக அளவில் எகிறி இருக்கிறது.
கடந்த சில நாட்களாக, 'இருள் ஆளப்போகிறது' என்ற போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த போஸ்டர்கள் உலகம் முழுவதும் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி இருப்பதில் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்த போஸ்டர்களில் QR கோட் இருக்கிறது. இதை ஸ்கேன் செய்வதன் மூலம் படத்தின் முதல் பார்வையை ரசிகர்கள் பார்க்கலாம். இது போன்ற புது யுக்திகள் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
ஓடிடி தளத்தில் 1 கோடி பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்த “உடன்பால்” திரைப்படம் !!
படத்தின் 40% படப்பிடிப்பு முதல் ஷெட்யூலுடன் முடிவடைந்து அடுத்த ஷெட்யூல் விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது. படத்தின் வேலைகள் விரைவாக நடந்து கொண்டிருப்பதற்கு ஒட்டுமொத்த படக்குழுவின் ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவும் & படத்தின் தயாரிப்பாளரும் நன்றி தெரிவித்துள்ளனர்.
'டிமாண்டி காலனி2' படத்தின் டேக்காக 'Vengeance of Unholy' பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அருள்நிதி, பிரியா பவானி சங்கர் ஆகியோர் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
கொசுவலை போன்ற கருப்பு நிற சேலையில்... கவர்ச்சிகரமாக படவிழாவிற்கு வந்த ஸ்ருதிஹாசன்! ஹாட் போட்டோஸ்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.