
பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஆர்த்தி. கடந்த சில வருடங்களாக 'ஜாங்கிரி மதுமிதா', 'விதியுலேகா' ஆகிய காமெடி நடிகைகளின் வரவேற்பால் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க சரியாக வாய்ப்புகள் அமையவில்லை.
இதனால் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'கலக்கப் போவது யாரு' என்கிற நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். பின் அவரை அந்த தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வைத்து அழகு பார்த்தது. ஆனால் தற்போது மீண்டும் இந்தத் தொலைக்காட்சி, 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சிக்கு இவரை நடுவராக அழைத்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் ஆர்த்தி இவர்களிடம் ஒரு சில காரணங்களைக் கூறி விட்டு தற்போது மற்றொரு தொலைக்காட்சி நடத்தி வரும் 'ஸ்டார் வார்ஸ்' நிகழ்ச்சியில் நடுவராக மாறியுள்ளார். இதனால் நேரடியாகக் கூறாமல் இப்படி துரோகம் செய்து விட்டார் ஆர்த்தி என இவர் மீது செம கடுப்பில் உள்ளதாம் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிறுவனம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.