தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய... தி.மு.க கட்சிக்கு மனமார்ந்த வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்!

Published : May 03, 2021, 11:51 AM IST
தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய... தி.மு.க கட்சிக்கு மனமார்ந்த வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்!

சுருக்கம்

ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்த, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு தேர்வு முடிகள் அறிவிக்கப்பட்டது. இதில் தி.முக கட்சி பெரும்பான்மையோடு தமிழகத்தில் ஆட்சியமைக்க உள்ள நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. 
தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையில் 159 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்றுள்ளது. தமிழக தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத முன்பில் இருந்தே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வெற்றி உறுதியானதை அறிந்து பல்வேறு தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். 

அந்த வகையில், பிரதமர் மோடி, விஜயகாந்த், எடப்பாடி பழனிச்சாமி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், இன்று காலை பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில்... "சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய,  இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார். 
 
PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சூர்யா 47 படத்துக்கு இம்புட்டு டிமாண்டா? அடேங்கப்பா... ஷூட்டிங் தொடங்கும் முன்பே இத்தனை கோடி வசூலா?
காளியம்மாள் ஐடியா; கார்த்திக்கை ஜெயிலுக்கு அனுப்ப உயிரை பணையம் வைத்த சந்திரகலா: கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!