ஆக்ஷன் ஹீரோவுக்கு ஜோடியாகும் பிரியா பவானி ஷங்கர்!

By manimegalai aFirst Published May 1, 2021, 6:10 PM IST
Highlights

நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக, இயக்குநர் எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தன் இயக்கத்தில் உருவான 'சக்ரா' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை தொடர்ந்து, விஷால் நடிக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
 

நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக, இயக்குநர் எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தன் இயக்கத்தில் உருவான 'சக்ரா' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை தொடர்ந்து, விஷால் நடிக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து ஆக்ஷன் படங்களையே தேர்வு செய்து நடித்து வரும் விஷால், தன்னுடைய நண்பர் ஆர்யாவுடன் 'எனிமி' படத்தில் நடித்துள்ளார். கொரோனா பிரச்சனையின் தலர்களுக்கு பின் இந்த படம் சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டது. ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டதாகவும். சண்டை காட்சிகள் வேறு லெவலில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தி அரிமா நம்பி, இருமுகன் படங்களின் இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கி உள்ளார்.

இந்நிலையில், தற்போது விஷால் நடிக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில், வரிசையாக அரை டஜனுக்கும் அதிகமான படங்களை கையில் வைத்திருக்கும் பிரியா பவானி ஷங்கர் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க உள்ளார். இந்த படத்தை, 'அடங்க மறு' படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேலு இயக்க உள்ளார்.

'அடங்க மறு' படத்தை போலவே இந்த படமும், முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் இருந்து நடைபெறும் என்றும், இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!