‘தோல்வி எனில் துவள வேண்டாம்’... என்ன நடந்தாலும் இதை மட்டும் தொடரும் படி தொண்டர்களுக்கு கமல் வேண்டுகோள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 01, 2021, 05:32 PM IST
‘தோல்வி எனில் துவள வேண்டாம்’... என்ன நடந்தாலும் இதை மட்டும் தொடரும் படி தொண்டர்களுக்கு கமல் வேண்டுகோள்...!

சுருக்கம்

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் மநீம தொண்டர்களுக்கு கமல் ஹாசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.   

தமிழக சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிகளிலும் கடந்த 6ம் தேதி நல்ல முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில்மக்கள் நீதி மய்யம் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, ஐகேகே ஆகியோருடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. இந்த கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக கமல் ஹாசன் அறிவிக்கப்பட்டார். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் மநீம தொண்டர்களுக்கு கமல் ஹாசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அதில், நாளை வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலோடு காத்திருப்பீர்கள். ஆர்வமிகுதியில் உங்கள் பாதுகாப்பை மறந்து விடக்கூடாது,வாக்கு எண்ணும் மையங்களில் கூட்டம் கூட வேண்டியதில்லை. அங்கீகரிக்கப்பட்ட முகவர்களைத் தவிர பிற கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.தேர்தல் முடிவுகளை விட உங்களுடைய பாதுகாப்பும், உங்கள் குடும்பத்தாரின் பாதுகாப்புமே எனக்கு முக்கியமானது வாக்குபதிவு முடிந்த மறுநாள் நான் உங்களுக்கு எழுதிய கடிதத்தின் வரிகளை இங்கே மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.

தேர்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவென்பது கிடையாது என்பதை நாம் நன்கறிவோம். இந்த தேர்தல் நமக்கு ஒரு புதிய அனுபவம்... புதிய தொடக்கம்.. இந்தத் தேர்தல் பயணத்தில் மக்களுக்கு நம் மீதிருந்த நம்பிக்கையை உணர்ந்திருக்கிறோம். மக்கள் அன்பே நம் பலம், மக்கள் நலனே எதைக்காட்டிலும் முதன்மையானது.

வெற்றி எனில் கொண்டாடத் தேவை இல்லை. தோல்வி எனில் துவள வேண்டியதில்லை. எதுவரினும் மக்கள் பணிகளைத் தொடருங்கள். இந்த இக்கட்டான சூழலில் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுங்கள். 'நாமே தீர்வு" நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அன்றாடம் வரும் அறிக்கைகள் மூலம் அறிகிறேன். உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.மக்களுக்காக, மக்களுடன் களத்தில் நிற்போம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?