கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சூர்யா பட நடிகர் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம்...!

By manimegalai aFirst Published May 1, 2021, 12:44 PM IST
Highlights

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இயக்குனர் கே.வி.ஆனந்த் நேற்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரை தொடர்ந்து மற்றொரு பிரபல நடிகர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இயக்குனர் கே.வி.ஆனந்த் நேற்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரை தொடர்ந்து மற்றொரு பிரபல நடிகர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மாநிலம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சுகாதார துறையினரும் இந்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதே போல், இன்று முதல் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய மற்றும் மாநில அரசிகள் அறிவித்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் இந்தியாவில் எடுக்கப்பட்டு வந்தாலும், நாளுக்கு நாள் கொரோனானால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை மட்டும் கூடி கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில், இந்தியாவில் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் அதிகமாக இருப்பதால், சில இடங்களில் ஆச்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சரியும் பணியிலும் மத்திய மாநில அரசுகள் முழு மூச்சுடன் இறங்கியுள்ளனர்.

கொரோனாவின் முதல் அலையை விட, இரண்டாவது அலையில் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.  அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 3,523 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,11,853 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சூர்யா படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இந்தி நடிகர் பிக்ரம்ஜீத் கன்வர்பால் 52 வயதாகும் இவர் ராணுவ வீரரான இருந்து ஓய்வு பெற்ற பின், நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக பாலிவுட் திரையுலகில்  2003 ஆம் ஆண்டு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.  பின்னர் பேஜ் 3, கார்பரேட், கியா லவ் ஸ்டோரி ஹே, உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக தமிழில், சூர்யா நடித்த 'அஞ்சான்' படத்தில் சமந்தாவின் தந்தையாக நடித்து மிரட்டி இருந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். இவரது இழப்பு பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

click me!