பேத்திக்கு குழந்தையாகவே மாறி பியானோ கற்று தரும் இளையராஜா... வைரலாகும் வீடியோ..!

Published : May 01, 2021, 12:04 PM IST
பேத்திக்கு குழந்தையாகவே மாறி பியானோ கற்று தரும் இளையராஜா... வைரலாகும் வீடியோ..!

சுருக்கம்

இசைஞானி இளையராஜா அவரது பேத்திக்கு, பியானோ கற்று தரும் அழகு வீடியோ ஒன்று ரசிகர்களால் அதிக பார்க்கப்பட்டு வருகிறது.   

இசைஞானி இளையராஜா அவரது பேத்திக்கு, பியானோ கற்று தரும் அழகு வீடியோ ஒன்று ரசிகர்களால் அதிக பார்க்கப்பட்டு வருகிறது. 

பல இசை ரசிகர்கள் மனதை, தன்னுடைய ஈடு இணையில்லா... பாடங்கள் மூலம் கட்டி போட்டவர் இளையராஜா. இசை கடவுள் என்றும் பலரால் போற்ற பட்டு வருகிறார். பல இசையமைப்பாளர்கள் தோன்றினாலும் இளையராஜாவின் பாடல்கள் அன்று முதல் இன்று வரை இளைஞர்களுக்கும் மிகவும் பிடித்தவை. இவரை தொடர்ந்து இவரது, மகன் யுவன் ஷங்கர் ராஜா இசைக்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜாவின் மகள் ஜியாவிற்கு, இசைஞானி பியானோ சொல்லி கொடுக்கும் அழகு வீடியோ வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இவரது குடும்பமே இசை குடும்பமாக, இருந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் நிலையில், இந்த மழலைக்கும் இசை மீது இவ்வளவு ஆர்வமா? என ஆச்சர்யப்பட்டு போகிறார்கள் இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள். அதே நேரத்தில், எப்போது அமைதியானவராகவே... இருக்கும் இளையராஜா, பேத்தியுடன்  குழந்தையாகவே மாறி, இசை கற்று கொடுக்கிறார்.

இந்த கியூட் வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. சென்னை சாலிகிராமத்தில் இருந்த பிரசாத் ஸ்டுடியோ பிரச்சனை, நண்பர் எஸ்.பி.பி மரணம் என தொடர்ந்து, மனக்கஷ்டத்தில் இருந்த இளையராஜா, சமீபத்தில் தான் சாலிகிராமத்திலேயே ஒரு புதிய மியூசிக் ஸ்டுடியோவை திறந்தார். அதில் தான் இளையராஜா கிடப்பில் போடப்பட்ட அனைத்து இசை பணிகள் , மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மெல்ல மெல்ல, தன்னுடைய மன கஷ்டங்களில் இருந்து மீண்டு வரும் இளையராஜா, முதல் முறையாக தன்னுடைய பேத்திக்கு இசை ஆசிரியராய் மாறி உள்ள வீடியோ படு வைரலாகும், இளையராஜாவின் ரசிகர்களை மனதை சந்தோஷப்படும் விதத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!