உடனே வண்டிய திருப்பு.. கே.வி.ஆனந்த் வீட்டு வாசலில் கூட கால் வைக்காமல் வேகமாக திரும்பிய சூர்யா...ஏன் தெரியுமா?

By Kanimozhi PannerselvamFirst Published Apr 30, 2021, 6:41 PM IST
Highlights

கே.வி.ஆனந்த் மரணமடைந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் நடிகர் சூர்யா சாஸ்திரி நகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு உடனடியாக விரைந்தார். 

தலைசிறந்த காமெடி நடிகராக வலம் வந்த விவேக் மரணத்தை அடுத்து பிரபல இயக்குநரையும் பறிக்கொடுத்த சோகத்தில் மூழ்கியுள்ளது கோலிவுட். தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் கே.வி.ஆனந்த். கடந்த 24ம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று அதிகாலை 3 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு கொரோனா தொற்று இருந்தால் உடல் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே சாஸ்திரி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. அதன் பின்னர் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

கனா கண்டேன் திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான கே.வி.ஆனந்த், அதன் பின்னர் நடிகர் சூர்யாவை வைத்து அயன், காப்பான், மாற்றான் என அடுத்தடுத்து 3 வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். சூர்யாவின் திரை வாழ்க்கையில் இந்த 3 திரைப்படங்களும் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. கே.வி.ஆனந்த் மரணமடைந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் நடிகர் சூர்யா சாஸ்திரி நகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு உடனடியாக விரைந்தார். 

ஆனால் அங்கு சென்ற சூர்யாவிற்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. அதாவது கே.வி.ஆனந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவருடைய உடல் வீட்டிற்கு கொண்டு வரப்படாமல், மணப்பாகத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் இருந்து, பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து காரிலேயே அமர்ந்திருந்த சூர்யா, இதுபற்றி தகவல் கிடைத்ததும் கே.வி.ஆனந்திற்கு இறுதி மரியாதையே செலுத்தியே தீர வேண்டும் என்பதற்காக மியாட் மருத்துவமனை சென்றுள்ளார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இயக்குனர் கே வி ஆனந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் சூர்யா அவரது இல்லம் வந்தார்.

ஆனால் உடல் இன்னும் இல்லத்திற்கு கொண்டுவரப்படவில்லை என்ற தகவலை தொடர்ந்து காரை விட்டு இறங்காமல் மியாட் மருத்துவமனை புறப்பட்டார். pic.twitter.com/elNfucRt2i

— DINESH UDHAY (@Me_dineshudhay)
click me!