
மாரடைப்பால் காலமான இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி . கொரோனா தொற்று இருந்ததல், வீட்டில் 5 நிமிடங்களுக்கு மட்டும் கே.வி.ஆனந்தின் உடல் வைக்கப்படுகிறது. சமீபத்தில் நடிகர் விவேக், இயக்குனர் ஜனநாதன், இயக்குனர் தாமிரா போன்றவர்களை நாம் அடுத்தடுத்து இழந்த நிலையில், இப்போது கே.வி.ஆனந்தையும் பறிகொடுத்திருக்கிறோம்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு உயிர் பிரிந்தது. பத்திரிகைகளில் புகைப்பட கலைஞராக வாழ்க்கையை தொடங்கிய கே.வி.ஆனந்த், ஒளிப்பதிவாளராக தனது முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றார். கணா கண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்த கே.வி.ஆனந்த், அயன், கோ, மாற்றான், அனேகன், கவண் மற்றும் காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். நெஞ்சுவலி வந்ததும் தானே காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார் இயக்குநர் கே.வி.ஆனந்த். இருந்தும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை காலமானார்.
கொரோனா தொற்றால் உயிரிழந்த இயக்குநர் கே.வி.ஆனந்த் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக 5 நிமிடங்கள் மட்டுமே வைக்கப்பட்டு, பெசன்ட்நகரில் உள்ள மின்மயானத்தில் சற்றுநேரத்தில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.