ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட 'முதலும் முடிவும்' காதல் மொழி பேசும் ஆல்பம் பாடல்!

Published : May 01, 2021, 07:30 PM IST
ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட 'முதலும் முடிவும்' காதல் மொழி பேசும் ஆல்பம் பாடல்!

சுருக்கம்

ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியான இண்டிபெண்டெண்ட் பாடலான 'முதலும் முடிவும்' இசை ஆல்பத்தை பார்த்து, திரையுலகினர் பலரும் பாராட்டியுள்ளனர்.  நடிகர் ஹரீஷ் கல்யாண், நடிகர் பிரேம்ஜி, நடிகர் மாஸ்டர் மகேந்திரன் , இசை அமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன், மியூசிக் டைரக்டர் சபீர், இவர்கள் அனைவரும் இசையமைப்பாளர்  ஹரி எஸ். ஆர். யை பாராட்டி இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளனர்.  

ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியான இண்டிபெண்டெண்ட் பாடலான 'முதலும் முடிவும்' இசை ஆல்பத்தை பார்த்து, திரையுலகினர் பலரும் பாராட்டியுள்ளனர்.  நடிகர் ஹரீஷ் கல்யாண், நடிகர் பிரேம்ஜி, நடிகர் மாஸ்டர் மகேந்திரன் , இசை அமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன், மியூசிக் டைரக்டர் சபீர், இவர்கள் அனைவரும் இசையமைப்பாளர்  ஹரி எஸ். ஆர். யை பாராட்டி இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பொது முடக்க காலத்தில் படப்பிடிப்புகள் முடங்கியுள்ள நிலையில், திரையுலகத் திறமையாளர்கள் முடங்கிப் போகாமல் இருக்க பல்வேறு இசை ஆல்பங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அப்படி வெளியாகும் பாடல்களுக்கு, உலக ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. அந்த வகையில் வெளியான 'என்ஜாயி எஞ்சாமி ' பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த வரிசையில் சேர்வதற்கு பலரும் தயாராகி வருகிறார்கள்.

அவ்வகையில்  'முதலும் முடிவும்' என்கிற பெயரில் காதல் மொழி பேசும் இனிமை சொட்டும் சுதந்திர ஆல்பம் ஒன்று உருவாகியுள்ளது.

இதற்கும் இசையமைத்து உள்ளவர் ஹரி எஸ். ஆர். இசையின் மீது தீராத காதல் கொண்டுள்ள இவர், ஏராளமான இசைக் கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர். தமன், ஷபீர், கணேஷ் சந்திரசேகரன் போன்ற இசையமைப்பாளர்களிடம் திரைப்படங்களில்   பணியாற்றியவர். நிறைய மேடைகளில்  இசைக்குழுவில் இடம்பெற்றுத் தன் திறமையை வெளிப்படுத்தியவர். சங்கரா டிவி, SVBC டிவி  போன்ற தொலைக்காட்சிகளில் தோன்றி இசை நிகழ்ச்சிகள் வழங்கியவர்.

தன்னுடைய இசைக் கனவினை மனதில் சுமந்து கொண்டு இருந்தவர், படிப்பை முடித்த பின் இப்போது முழுநேர இசையமைப்பாளராக களத்தில் இறங்கி விட்டார். அப்படி இறங்கி ஐம்பது விளம்பரப் படங்களுக்கும் இருநூறு குறும் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
பாடல் மூலம்தான் ரசிகர்களைச் சென்றடைய முடியும் என்று, இந்த பாடல் ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார்.

 இவர் தன்னுடைய திறமையைக் காட்ட முன்னோட்டமாக இந்த 'முதலும் முடிவும்'  ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார்.
இந்த ஆல்பத்தில் 'முதலும் நீ தான் முடிவும் நீ தான்'  என்று தொடங்கும் பாடல்  வரிகளை ரேஷ்மன் குமார் எழுதியுள்ளார். இந்தப் பாடலை  ஏர்டெல் சூப்பர் சிங்கர் வெற்றியாளர் ஆனந்த் அரவிந்த் தக்ஷன் பாடியுள்ளார். பெண்குரலாக ஆர்த்தி எம்.என். அஸ்வின் பாடியுள்ளார். இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Actress Urvashi : மகளுடன் கமலை சந்தித்த ஊர்வசி! அம்மாவின் அழகை மிஞ்சும் மகளின் ப்யூட்டிபுள் போட்டோஸ்
Dhanush Net Worth : விளம்பரத்திற்கே கோடிகளில் சம்பளம்.. வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர வீடு, கார்கள்.. தனுஷின் சொத்து மதிப்பு இவ்வளவா?