
இன்று, கேரளமக்கள் அனைவரும் ஓணம் பண்டிகையை தங்களுடைய குடும்பத்துடன், மிகவும் சந்தோஷமாக கொண்டாடி வருகிறார்கள். தங்களுடைய வீட்டு வாசலில் விதவிதமான பூக்கோலம் போட்டு, அறுசுவை உணவு சமைத்து, கோவில்களுக்கு குடும்பத்தினருடன் சென்று தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
மேலும் இன்று ஓணம் கொண்டாடும், உலகம் முழுவதிலும் உள்ள கேரள மக்களுக்கு, பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில் ஓணம் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய வாழ்த்துக்களை ஆங்கிலத்திலும் தெரிவித்துள்ளது மட்டும் இன்றி, மலையாளத்திலும் பதிவு செய்து தெரிவித்துள்ளார். இவரின் இந்த ட்விட்டருக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
மலையாள மொழி அறிந்த பிரபலங்கள் கூட , ஆங்கிலத்தில் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கும் நிலையில், இவர் மலையாளத்தில் தெரிவித்துள்ளது மலையாள ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது. இவரின் ஐடியா மற்றவர்களுக்கு தெரியவில்லை என கூட சில ரசிகர்கள் ட்விட் செய்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.